பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

178 ஆழ்வார்கள் காலநிலை எளிதிற் கிடைத்ததற்கேற்ற இடத்தைப் பற்றிக் கொண்டு அவ்வடவேந்தன் பல்லவனாட்சிக்குட்பட்ட சோணாட்டுட் புகுந்தவன் என்பதும், அங்ஙனம் புக்கவனை விரைந்தோடப் புறங்கண்டவர் அவ்வீரர் என்பதும் தொனித்தல் காணலாம். அங்ஙனம் பாண்டியனு தவுதற்கேற்ற இடம் அவன் நாட்டையடுத்த சோணாட்டுப் பகுதியாதலே பெரிதும் ஏற்புடையதென்க, நரசிம்மவர்மன் இரண்டா முறை வந்த புலகேசியுடன் நடத்திய போர்க்களங் களோ, தொண்டை நாட்டில் காஞ்சி நகரமும் மணி மங்கல முதலிய ஊர்களும் ஆகும். அவை, படை யெடுத்து வந்த அவ்வடவேந்தனுக்குப் பாண்டியன் உதவற்கேற்ற இடம் ஆகாமையும், தொண் டை நாடுவரை சென்று பாண்டியன் வடவனுக்கு உதவி புரியும்படி நாங்கைவீரர் இடையிற் பொறுத்திரார் ஆதலின் அப்பாண்டியன் ஆங்குச்சேறல் கூடாமையும் கண்டுகொள்க. இவற்றால், ஆழ்வார் கூற்று 7-ம் நூற்றாண்டின் இடையில் நிகழ்ந்த புலிகேசியின் இரண்டாம் படை யெடுப்பைப் பற்றியதும் அன்றென்பது தெரியலாகும். 3. மூன்றாம் படையெடுப்பு :-மேற்கூறிய இரண்டாம் புலகேசியின் மகனான விக்கிரமாதித்தன் என்பான், அந்நரசிம்மவர்மன் பேரன் பரமேசுவரவர்மன் காலத்தே தன்னகர்க்கும் தந்தைக்கும் பல்லவரிழைத்த அவமானம் பொறாது, பல்லவனாதிக்கத்தைத் தொலைக்கவேண்டித் தக்ஷிணத்தை நோக்கிப் பலலக்ஷம் படையுடன்வந்து சோழதேசத்துட் பிரவேசித்துக் காவிரித்தென்கரையி லுள்ள உரகபுரத்தில் பாடியிறங்கினன் என்றும், இங்ஙனம் பிரவேசித்தவனை 674-ல் பரமேசுவரவர்வன் எதிரேற்றுப்