பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 179 பெருவளநல்லூரிற் பெரும்போர் புரிந்து பகைச் சேனைகளை முறியடித்து அவ்வேந்தனைத் தனியனாய் ஓடித் தப்பும்படி புறங்கண்டனன் என்றும் - கத்வால், கூரம் முதலிய சாஸனங்கள்விரியக்கூறுகின்றன இவ்விக்கிரமாதித்தன் வந்துதங்கிய உரகபுரம் என்பது உறையூரே என்றும்', அவ்வூர்க்கு வடமேற்கு 10-மையில் உள்ள பெருவளநல்லூரே பல்லவன் அச்சளுக்கனை முறியடித் தோட்டிய போர்க்களம் என்றும் கண்டு வெளியிட்ட டாக்டர் - தூப்ராயில் துரையின் கருத்து முழுதும் பொருந்துவதாகும். பாண்டி நாட்டின் எல்லையை அடுத்து நிகழ்ந்த இப்போர்ச் செய்தியே ஆழ்வார் கூற்றுக்குப் பெரிதும் அமைவுடையது. அதனை நன்கு விளக்குவேன். விக்கிரமாதித்தன் சோழ மண்டலத்துட் படை யெடுத்து வந்த போது பாண்டி நாட்டை ஆண்டு 1. சோழராஜதானிகளுள் உரகபுரமும் ஒன்றென்பது உரகபுரியாள் தலைவா தாலேலோ" என்று கூத்தர்பாடிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்த் தொடரொன்றால் தெரிய வருகின்றது. இவ்வுரகபுரி உறையூரேயாம். மேற்குறித்த தொடர், தஞ்சைச் சரஸ்வதிமாலில், எடி பிள்ளைத்தமிழின் சிதைந்த சுவடியொன்றில் தாம் கண்டறிந்ததென்று ஸேது ஸம்ஸ்தானம் மஹாவித்வான் ஸ்ரீ உப வே. ரா. இராக வையங்கார் ஸ்வாமி அன்புடன் தெரிவித்தார்கள். இது தூப்ராயில் துரையவர்கள் முடிபை உறுதிப்படுத்துதல் காண்க. 5ஆம் நூற்றாண்டினரான புத்ததத்தர் என்ற பௌத்தப்பெரியார் சோணாட்டுள்ள இவ்வரகபுரியினர் என்பது அவர் இயற்றிய அபிதம்மாவதாரம் என்ற பிராகிருத நூலால் அறியப்படுகின்றது. (History of the Tamils by Prof. P. T. Srinivasa Iyengar, p. 529.)