பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 183 விரோதிகளே என்பது பெறப்படும். அம்முறையே, முன்பு தங்கட்கு உதவிய புலகேசியின் மகன் விக்கிர மாதித்தன் படையெடுப்பிலும் தமிழரசருள் அக்காலத் துச் சிறந்தவனான பாண்டியன், அவ்வட வேந்தனுக்கே உதவியாயிருந்திருக்கவேண்டும் என்று கருதத் தடை யில்லை . இச்செய்தியையே‘ஒண்டிறல் தென்னனோ டவ்வடவர சோட்டங்கண்ட திண்டிறலாளர்' என்று திருமங்கை மன்னன் பாடுதல் குறிப்பிடத் தக்கது. பெருவலி படைத்திருந்த பாண்டியனோடு வடவரசனைப் போரில் ஓட்டங் கண்டவர் நாங்கை வீரர்' என்பது இதன்பொருள். 'ஒண்டிறல் தென்னன்' என்றார், பெருவலி படைத்தவன் பாண்டியன் என்பது தோன்ற தென்னனோடு அவ்வடவரசு 'என்பதனால், அப் பாண்டியன், படையெடுத்து வந்த வடவேந்தன் சார்பானவன் என்பது விளங்கும். அவ்வடவரசு' என்ற உலகறி சுட்டால், அவ்வாறு வந்தவேந்தன் மிகப் பிரசித்தன் என்பது பெறப்படும்.

  • தென்னனோடு' என்று கண்ணழியாமல் ‘தென்னன் ஓட, வடவரசு ஓட்டம் கண்ட' என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம். இங்கும், துணைவந்த பாண்டியனை

1, (விக்கிரமாதித்தனைப் பெருவேந்தனாகச் சிறப்பிக்கப் புகுந்த நிலையில் அவன் சேர சோழ பாண்டியர் முதலிய அரசர்களை வென்றவன் என்று சாஸனங்கள் புகழ்கின்றன. இதற்கு அவ்வேந்தரெல்லாம் இவனுக்கு அடங்கியவர் என்பதே கருத்தாகக் கொளக.)