பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 185 இவ்வாறு பரமேச்சுரவர்மன் காலத்தில் வட வேந்தனான விக்கிரமாதித்தன் படையெடுத்துவந்து பெருந்தோல்வியுற்றதும், பாண்டியன் அவன் சார்பா யிருந்து உதவியதும் பழைய சாஸன வழியால் வெளிப் படையாகவும் குறிப்பாகவும் பெறப்படுதலின், அப்படை யெடுப்பே ஆழ்வார் திருவாக்குக்குப் பெரிதும் அமை வுடையதாகின்றது. அவ்வடவேந்தனைப் பெருவளநல்லூரில் முறியடித் தோட்டிய பின், பரமேச்சுரவர்மன், சளுக்கிய ராஜ்யத் தின்மேற் படைகொண்டு சென்று அவன் தலைநகரைதன் பாட்டனைப் போலவே-அழித்தனன் என்றும், சிறுத்தொண்டர் மன்னவற்குத் தண்டுபோய் வாதாபித் தென்னகரந் துகளாக்கி”யதாகச் சொல்லப் படுவது, இப்பரமேச்சுரன் காலத்து நிகழ்ச்சியே யென்றும், அதனால், இப்பல்லவன் காலமே-சிறுத் தொண்டர்க்கும், அவரை நேரிற் சந்தித்த சம்பந்த மூர்த்திகட்கும், அம்மூர்த்திகளால் சைனமதத்தினின்று மீளப்பெற்ற நெல்வேலி வென்ற நெடுமாறனுக்கும் உரியது என்றும் மேலே விரிய விளக்கியுள்ளேன். எனவே, அச்சம்பந்தர் காலத்தவராகக் கூறப்படும் திருமங்கை மன்னனால்என்று சாஸன ங கூறுவதற்கு - பல்லவமரபினராய் வெவ்வேறு நாடாண்ட மூவரென்றும், அவராவார்காஞ்சிப்பல்லவர் நுளம்பபல்லவர், பலக்கடப்பல்லவர் என்பார் என்றும் நிரூபித்து, டாக்டர் N. வேங்கடராமணய்யா அவர்கள் எழுதியுள்ள கட்டுரை அறியத்தக்கது (The Madras Christian College Magazine, January, 1929.) இவற்றால் பாண்டியன், விக்கிரமாதித்தனுக்கு எதிர்க் கட்சியில் இருந்தவன் என்று துரையவர்கள் கருதியதற்குப் பிரமாணமில்லையென்க.