பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 189. திருந்த முனிவரர்' என்பர். இவற்றுள் இருங்குன்று என்பது திருமாலிருஞ்சோலை என்ற அழகர் மலையாகும்.. “இருங்குன்றத் தடியுறை யியைகென என்பது பரிபாடல் (15, 16). திருமங்கை மன்னன் காலத்திலும் சைன பௌத்தர்கள் அழகர் திருமலையில் வசித்து வந்தனர் என்பதும், அம்மலையில் அநாதியாகவே திருக் கோயில் கொண்டருளிய திருமாலைப்பற்றி அன்னோர் வாய்க்கு வந்தன பேசிப் போந்தனரென்பதும் “புத்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவு முகந்திட் டெந்தைபெம் மானாரிமையவர் தலைவர் எண்ணிமுன் னிடங்கொண்ட கோயில்” (பெ, தி 9, 8, 9) என்று இப்பெரியார் திருமாலிருஞ்சோலைப் பதிகத்துக் கூறுதலால் தெரிகின்றது. அழகர் திருமலையில் சைனரும் பௌத்தரும் ஆழ்வார்கட்கு முன்பே வசித்து வந்தவர்கள் என்பது அம்மலைக் குகைகளில் அமைந். துள்ள “ப்ராஹ்மி” சாஸனங்களாலும், பிற சைனசாஸ னங்களாலும் நன்கு விளங்குவன', முத்தரையர் பல்லவரது தென்னாட்டு ஆதிக்கத்துக்குச் சிறந்த காரணபூதராய் நின்று உதவியவர், முத்தரையர் என்ற வகுப்பினராவர், பல்லவமல்லனது இளமைக் காலத்தில் அவ னாட்சியை நிலைநிறுத்தியவர்களுள்ளே பெரும்பிடுகு, 1. அழகர்மலையில் சாஸனங்களுடன் உள்ள இக். குகைகள் பஞ்சபாண்டவர் படுகை' என்று வழங்குகின்றன. (Ep. Rep. Nos 70-79. of 1910, n 80)