பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

190 ஆழ்வார்கள் காலநிலை முத்தரையன் என்பான் ஒருவன்'. இவனைக் கள்வர கள்வன் என்று சாஸனம் விசேடித்துக் கூறுகின்றது. இம்முத்தரையர் கள்வர் குலத்தவராகவும், பெரு வீரர்களாகவும், புலவர் புகழ்ச்சிக்கு உரியராகவும் பழங் காலத்தே விளங்கினவர். பல்லவர்க்குப் பெருந்துணையாக நின்ற இன்னோர், பாண்டிய சோழர்களுடன் பல போர்கள் புரிந்து சோணாட்டை அவர் குடைக்கீழ் நிறுவியதோடு, அவர்க் குப் பிரதிநிதிகளாய்த் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு அந்நாட்டைத் தாமே ஆட்சிபுரிந்தும் வந்தனர். இக்காலங்களிற் சோழர்கள் பேருக்கரச ராய்ப் பல்லவர்கீழ் ஒடுங்கிப்போயினர். திருமங்கை மன்னன் ஆலிநாட்டதிபரான கள்வர் குலத்தவர் என்ற வரலாறு வழங்குதலும், பல்ல வாதிககம் சோணாட்டிற் பல்கி நின்ற காலத்தே தாமும் விளங்கி அப்பல்லவர் பெருமைகளையே பலபடப் பாராட் டுதலும் மேலெல்லாம் நன்கறியப்பட்டன. இங்ஙனம் கள்வர் குலத்துதித்த சோணாட்டுத் தலை வராய்ப் பல்லவாபிமானம் மிக்குடைய நம் பெரியாரை மேற்கூறிய முத்தரைய மரபினருள் ஒருவராகவே நாமும் 1. Ep. Ind. XV, No. 5, p 49 f. 2. நாலடியாரில் பெருமுத்தரையர் (200, 286) என்று சிறப்பிக்கப் பெற்றிருத்தலாலும், செந்தலைச் சாஸனத்தில்பாச்சில்வேள் நம்பன், குலாலன் காஞ்சன், கோட்டாற்று இளம்பெருமானார், ஆசாரியர் அநிருத்தர் என்ற புலவர் களாற் பாடப்பெற்றிருத்தலாலும் (செந்தமிழ். தொ-6, பக். 10-15) தமிழ்முத்தரையர்கோவை (யாப்பருங்கலவிருத்தி' பக், 486) என இவர்சம்பந்தமாக வழங்கும் நூலாலும் இன்னோரது 'புலவர் பாடும் புகழுடைமை தன்குவிளங்கும்.