பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 191 கருதல் கூடியதன்றோ ? 'கள்வனேனானேன் படிறு செய்திருப்பேன்' என்ற இப்பெரியார் கூற்றுள், 'தம் குலத்தைக் குறிப்பிட்டுக் கொண்டனர் இவர்' என்று கொள்ளற்கும் இடமுண்மை காணலாம். இக்கள்வராகிய' முத்தரையர் குலத்தவராய்த் தம் அரசனுக்குப் பேருதவிபுரிந்த சிறப்புப்பற்றியே “ஆலிநாட னருண்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம் “வாட்டிறற் றானை மங்கையர் தலைவன் “அமரிற் கடமா களியானை வலான்" “ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடன்மாவலவன்" “மருவலர்த முடல்துணிய வாள் வீசும் பரகாலன்' என்றிவைபோலும் வீரப் பெருமையால் தம்மை ஆழ்வார் சிறப்பிப் பாராயினர் என்றுணர்க. பல்லவர்களுள் பரம வைஷ்ணவர்களான நந்திவர்மன் தந்திவர்மன் காலங் களில் விளங்கிய முத்தரையர்கள் தம்மரசரைப் போலவே திருமால் சமயத்தவர்களாக இருந்திருத்தல் கூடிய தென்பதும் இங்கு அறியத்தக்கது. களவுத் தொழிலில் இழிவான முறைகளையெல்லாம் திருமங்கை மன்னன் கையாண்டொழுகியவர் என்ற 1, கள்வர் குலத்தவர்ச்குச் செம்பிய முத்தரையர் என்ற பட்டப் பெயரும் சோணாட்டில் இன்றும் வழங்குதல் அறியத் தக்கது. (திருவாளர். மு. வேங்கடசாமிநாட்டார் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் - பக் 23, 24.) 2. கள்வர் மரபினருள் திருமால் சமயத்தவராகப் பலர் சோணாட்டில் இன்றும் உள்ளனர்.