பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

192 ஆழ்வார்கள் காலநில சரித்திரம் நெடுங்காலமாகப் பிரபலம் பெற்றுள்ளது, அவை பெரும்பாலவும் இவரது குலப்பெயர் பற்றியும், ( கள்வனே னானேன் படிறுசெய் திருப்பேன் கண்டவா திரிதந்தே னேலுந் தெள்ளியே னானேன் செல்கதிக் கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன் (பெ, தி. 1, 1,5) * கோடிய மனத்தாற் சினத்தொழில் புரிந்து திரிந்துநா யினத்தொடுந் திரிந்திட் டோடியு முழன்று முயிர்களே கொன்றே னுணர்விலே னாதலால்" (க்ஷ, 1, 6, 6} என்பன போன்ற இவரது திருவாக்குக்களிலிருந்தும் பிற்காலத் துண்டான கதைகளாகவே தோற்றுகின்றன, அக்கதைகள் யாவும் உண்மையானவையாயின், இந்திர திருவினராகவும், சத்தியவானாகவும், அருள்மாரியாகவும் தாதாவாகவும், பண்டிதராகவும், பரமவைஷ்ணவரா' கவும் தம்மைப்பற்றி இவர் நெடுகக் கூறிவருவனவற் றோடும் பெரிதும் முரணத்தடையில்லை. 'கள்வனே னானேன்' என்பது முதலிய இவ்வாழ்வார் பாசுரங்கள், தாம்பிறந்த வீரக்குடிகேற்றபடி, போர்களிற் பிறர்பொருளைக் கொள்ளையிட்டும் வேட்டை முதலியவற் 1. இவ்வாழ்வார் அவதரித்தது 'சபரகுலம்' என்று திவ்யசூரிசரிதம் முதலியவை கூறும், வேட்டை முதலிய வற்றில் விருப்பமிக்கிருந்தமைபற்றிக் கள்வர் குலத்தை வட மொழியாளர் அவ்வாறு பெயர்த்துக்கொண்டனர் போலும். வேங்கடமலைக்குத் தலைவனும், வள்ளலுமான புல்லி என்பானைக் கள்வர்கோமான் என்று சங்க நூல்கள் (அகநானூறு. 6) கூறுவதினின்று, இக்கள்வர்குடியின் பழமைபெருமைகள் தெரியலாம்.