பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 193 றிற் கொடுமையிழைத்தும்போந்த தம் முன்செயல்களை வெறுத்துரைத்தன வேயன்றித் தாம் மேற்கொண் டிருந்த களவுமுறைகளைக் குறித்தனவென்று ஒருதலை யாகச் சொல்லத்தக்கன ஆகா. அந்தணர் குலத்தவரான தொண்டரடிப் பொடிகளும் சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்” என்று 'ஆத்மாபஹாரம் செய்து போந்த தம்மைக் கள்வன் என்று கூறிக் கொள்ளுதல் காணலாம். இளமையில் தம் அரசன் கட்டளை கடந்ததனால் ஆழ்வார் கடுந்துன்பத்துக்கு உள்ளாகியவர் என்ற சரித்திரமுள்ளது. ஒருகால் அக்காலத்தே ஆறலைகள்வர் அராசகர்களுடன் சேர்ந்து இவர் சில அதிக்கிரமங்களைச் செய்திருத்தல் கூடியதே. ஆனால் பருவம் நிரம்பிய நிலையிலும் அவற்றையே செய்து தாம் கவர்ந்த கொள்ளைப்பொருமால் திருமால்கைங்கரியம் புரிந்துவந் தவர் இப்பெரியார் என்று வழங்குங் கதைகள் பெரும் பாலவும் கற்பிதங்களே என்பதில் ஐயமில்லை. “தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்து மிட்டேன் பெரியே னாயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன் என்று, தம் வாழ்நாளின் முன்பின் பகுதிகளில் நிகழ்ந்த செயல்களை இவ்வாழ்வாரே கூறுதல் அறியத்தக்கது. இதனால் தம் முன்னோர் போலவே பேரரசரின் கீழ் அரசியல் நிர்வாகத்தில் தம் ஆயுளின் ஒருபகுதியைக் கழித்தவர் இப்பெரியார் என்பதே மிகவும் பொருத்த மென்க. இனித் திருமங்கைமன்னன் தமக்கு முன்னும் தங் காலத்தும் விளங்கிய திருமாலடியரான அரசரையும் பிறரையும் பற்றிக் குறிப்பிடுதல் அறியத்தக்கது. தம் 13