பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 197 நூலாலிழைத்து வந்த மேல்விதானத்திருப்பணியை அழித்துவந்த யானை நுழையாவண்ணம் சிவபிரானுக்கு மாடக்கோயில் பல கட்டி வழிபட்டவன் என்பது தேவார முதலியவற்றால் அறியப்படும், இங்ஙனம் இவன்கட்டிய சிவாலயங்கள் எழுபது என்று திருமங்கைமன்னன் தொகைப்படுத்துக் கூறுதல் அறியத்தக்கது. இதனை* இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற் கணிமாட மெழுபதுசெய் துலக மாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே" (பெ. தி. 6, 6, 8) என்பதனால் அறிக. இவ்வாறு செங்கணான் செய்த சிவன்கோயில்களாகத் தேவாரத்தால் அறியப்படுவன திருவானைக்கா, அம்பர், நன்னிலம், வைகன்மாடக் கோயில் என்பனவாம்.. சோழமண்டலத்தின் கூறுகளாக அமைந்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஓரொரு சிவாலயம் இச்செங்கணானாற் கட்டப்பட்டதென்பர் சேக்கிழார்." 'இங்ஙனம் சிவதொண்டினைச் சிறப்பப்புரிந்த இச் சோழன் முடிவில் திருநறையூர்த் திருமாலுக்கடியனாய்ச் சிறப்புற்றான் என்று திருமங்கை மன்னன் பாசுரப் 1. அம்பர்மாநகர்க், குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே” (தேவா, அம்பர். சம். 1), 'கோச்செங்கணான் செய்கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் ( நன்னில. சுந். II), வைகன் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்கணான் செய்கோயிலே” (ஷை, வைகன் மாட, சம். 4)-எனக்காண்க. 2. "செங்கணான், அந்தமில் சீர்ச்சோணாட்டி லகனாடு தொறுமணியார், சந்திர சேகரனமருந் தானங்கள் பலசமைத் தான்” (பெரியபு. கோச்செங்கட். 14).