பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 199 வேறு பல்லவனொருவனும் தில்லைச் சித்திரகூடத்துத் திருமாற்குப் பல திருப்பணிகளுஞ் செய்து பணிந்த செய்தியை“பைம்பொன்னு முத்து மணியுங் கொணர்ந்து படைமன் னவன்பல் லவர்கோன் பணிந்த செம்பொன்மணி மாடங்கள் சூழ்கின்ற தில்லைத் திருச்சித் திரகூடஞ் சென்றுசேர் மின்களே (3, 2, 3) என்று கூறுவர், இவ்வாழ்வார். படைமன்னவன் பணிந்த' என்பதனால் அவ்வரசன் வெற்றியுடன் வந்தவன் என்பதும், அவன் சமர்ப்பித்த அரும்பொருள்களில் முத்துங் கூறப்படுதலால் முத்துக் 1. சித்திரகூடம் -சிற்றம்பலத்தின் பக்கத்துள்ள திருமால் கோயில். சித்திரகூடந் தெற்றியம்பலம்" என்பர் திவாகர நிகண்டுடையார். தெற்றியம்பலம்-மேடையிடமா யமைந்த கோயில் (தெற்றி - திண்ணை ; அம்பலம்-கோயில்) திருத்தெற்றியம்பலம் எனத் திருமாற்கு வேறோர் கோயிலும் சோணாட்டுள்ளமை காண்க. தில்லைக்கோயிலுள் தரையின் கிழிடமாகச் சிவபிரானுக் கும் மேட்டிடமாகத் திருமாலுக்கும் முறையே சிற்றம்பலம் தெற்றியம்பலங்கள் பழைமையாகவே உள்ளன என்பதும், அவ்விரண்டும் அந்தணர் அரசர் முதலியோரால் ஒப்பப் போற்றப்பட்டன என்பதும் தேவார திவ்ய பிரபந்தங் களால் நன்கறியப்படும். வரங்கிடந் தான் தில்லை யம்பல முன்றிலம் மாயலனே” (திருக்கோவை. 86) என்று வாதவூரடிகள் புனைந்து கூறியதும், பேராசிரியர் 'இன்னும் வரங்கிடக்கின்றானாதலின்' என்று அவ்வடிக்கெழுதிய குறிப்புரையும் அச்சித்திர கூடமாகிய தெற்றியம்பலத்தின் பழைமைக்கு வேறு சான்றுதலுங் காண்க.