பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 209 முற்காலத்தே பெருக வழங்கி வந்ததென்பது நூல்களா லும் சாஸனங்களாலும் நன்கறியப்படுகின்றது, அப்பர் என்பதற்கேற்றபடி வடமொழிச் சாஸனங்களில் வழங்குஞ்சொல்-பட்டாரகர், ஸ்வாமி என்பன. இதனால் அப்பர், பட்டாரகர், ஸ்வாமி என்ற மூன்றும் 'பப்ப' என்பதனுடன் இணைந்து ஒரு பொருளே பயப்பவை என்பது உணரலாம்.. வடமொழியிலிருந்து எனவே, திருமங்கை மன்னன் தமக்கு வழங்குவ தாகக் குறிப்பிடும் பப்பவப்பர்' என்பது, பப்ப பட்டாரகர் அல்லது பப்ப ஸ்வாமி என்ற வடதொடரின் தமிழ்ப் பெயர்ப்பே என்பது விளங்கத் தடையில்லை. 1. காட்கரையப்பன் (திருவாய்மொழி), திருக்காட் கரை பட்டாரகர் (T. A. S. iii. 161) எனத் திருமாலுக்கும், அஞ்சையப்பன் (தேவாரம்), திருநந்திக்கரை பட்டாரகர் (T. A. S. ii, 206) எனச் சிவபிரானுக்கும், அப்பர், அப்ப மூர்த்தி , ஸ்ரீ முகுந்தோத்தம பட்டாரகர் (T. A S, ill 44) என வைதிக சமயப் பெரியோர்க்கும், தர்மபூஷண பட்டாரகர் (S. 1. I. i, Vol. 1, p 139) எனச் சைவ முனிவர்க் கும் அப்பர், பட்டாரகர் என்ற இரண்டும் ஒரே பொருளுடை பனவாக நூல்களினும் சாஸனங்களினும் வழங்குதல் அறியத்தக்கது. இவற்றுள் பட்டாரகர் என்பது படாரர், பழாரர் என்று திரிந்தும் வழங்கும் (T. A. S. ii, 139). *சிவப்பட்டார்' (நான்மு. 6) என்ற திருமழிசையார் வாக்கிற் கண்ட 'பட்டார்' என்பது இப்பட்டாரகரின் திரிபோ என்று கருதுவாருமுண்டு . (History of Sri Vaishnavas, P. 16) 2. 'மஹாராஜா பப்பஸ்வாமி' என்று ஒரு சாஸனம் கூறும் (Ind. Ant. XV. p. 274.) 3. பப்ப என்பது அசதியாடிக் கூறிய குறிப்புமொழி (க்ஷேபோக்தி) என்றும், அப்பர் என்பதற்குக் கிழவன் என்றும் 14