பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை பவும் அமைந்திருந்தன. வைணவாகமங்களாவன, பாஞ்சராத்திரமும் வைகானசமுமாம். “............. மலைமிசைநின்றோன் புள்ளணி நீள்கொடிப் புணர்நிலை தோன்றும்." (சிலப். 11, 136) “ செங்கட்காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை செங்கண் மா அல்." (பரிபா . 3, 81-82.) என, கோயிற்களிற் கருடத்துவச அமைப்பும், சங்கரு டண வாசுதேவ பிரத்தியும்க அநிருத்தர்களென்னும் வியூகாவதாரங்களும் பிறவும் சங்கச்செய்யுள்களிற் பயிலுதலினின்றும், அவ்வாகமவழியே கோயில்களும் கொள்கைகளும் பண்டைக்காலத்தில் அமைந்திருந்தன என்பது பெறப்படும். பாகவதர்- பகவர் திருமால் வழிபாட்டிற் சிறந்த பெரியாரைப் பாகவதர் என்ற பெயராற் பண்டைத் தமிழ்மக்கள் வழங்கலா .யினர்; பாகவதர் நாராயண சமயத்தோர் என்பது திவாகரம், பகம் எனப் பெயரிய ஷட்குணங்களால் பரிபூர்ணனான திருமாலின் சம்பந்தமுடை.யார்' என்பது இதன்பொருள். 1, 'செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்' என்று திருமங்கை மன்னனாற் பாடப் பெற்ற திருாறையூர் என்ற நாச்சியார் கோயிலில், இவ்வியூகாவதார மூர்த்தி களனைவரும் ஒருங்கெழுந்தருளியிருத்தல் அறியத்தக்கது. 2. ஷட்குணங்களாவன-அறிவு, திரு, ஆட்சி, ஆற்றல், அவாவின்மை, புகழ் என்பவை (விஷ்ணு புராணம்).