பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

213 திருமங்கை மன்னன் அரியும் சிவனும் ஓரிடத்தில் இனி, திருமங்கை மன்னன் மாமல்லபுரம், மாவலி புரம் என்று வழங்கப்பெறும் திருக்கடன்மல்லைத் தலசயனத்தைப்பற்றிய தம் இரண்டாந்திருப்பதிகத் தில்--

  • பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோ டிணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்

விசும்பிற் கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம் வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே” என்ற பாசுரத்தே, கடன்மல்லையில் திருமால் சிவபிரா னுடன் சேரக் கோயில் கொண்டுள்ளதைச் சிறப்பித்தல் காணலாம், மாமல்லபுரத்துக் கடற்கரைத் திருமால் கோயிலின் உள்ளிடமாக க்ஷத்ரியசிகா மணிப் பல்ல வேசுவரம், இராஜசிம்ம பல்லவேசுவரம் எனப் பெயரிய சிவாலயங்களிரண்டு அமைந்திருந்த செய்தி, அக் கோயிற்பக்கங்களைச் சோதித்தபோது கண்ட பழைய சோழ சாஸனங்களினின்று தெரியவருகின்றன. போற்றும் பெயர்கள் இராஜசிம்மன் என்பவன் (உத். 690-710) பல்லவ வமிசாவளியில் 6-ஆம் எண்ணுக்குரியவனும், இரண்டா முறைவாதாபி வென்றவனாக முற்கூறிய பரமேச்சுர வர்மன் மகனுமாவன். இவனுக்கு (இரண்டாம்) நரசிம்ம வர்மன், க்ஷத்ரியசிகாமணி என்ற வேறு பெயர்களும் உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனாரால் காடவர்கோன்