பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

214 ஆழ்வார்கள் காலநிலை கோன் கழற்சிங்கன்' என்று திருத்தொண்டத்தொகை யிற் கூறப்பட்ட பல்லவன் இவனே'. 1. இப்பல்லவனொருவனே சமாதானத்துடன் ஆண்டவ னாகவும், பரமசிவ பக்தனாகவும் விளங்கியவன் . காஞ்சீபுரத் தில் அரிய சிற்பத்தொழில் உடைய கைலாசநாதர் கோயில் எனப்படும் இராஜசிம்மேச்சுரமும் பனமலைச் சிவாலயமும் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில்களும் இவ்வேந்தனால் கட்டிப் பிரதிஷ்டிக்கப் பெற்றவை,சிவதொண்டு புரிவதினும் சிவனடியார்கட்கு வேண்டியனவுதவி அவர்களை ஆதரிப்பதினும் தன்காலத்தைச் செலவிட்டவன் இவன் என்பர். (தூப்ராயில் -பல்லவ சரித்திரம்). இவனைச் சிவசூடாமணி', 'ஸ்ரீ சங்கரபக்த:', சைவ ஸித்தாந்த மார்க்கே க்ஷ தஸகலமல' (சைவ சித்தாந்த மார்க்கத்தால் எல்லாப் பாவங்களையும் போக்கியவன்) என்று சாஸனங்கள் s.i.i. i,12--13) சிறப்பிக்கின்றன. இவனையே “கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் - காடவர்கோன் கழற் சிங்கன்" என்று சுந்தர மூர்த்திநாயனார் தம் திருத்தொண்டத் தொகையிற் பாடியதோடு, 'காக்கின்ற' என்பதனால் இவன் தங்காலத்த வனே என்பதையுங் குறிப்பிட்டனர். 'கழற்சிங்கன்' என்பதில் கழலென்பது அடைசொல்லே யன்றி இயற்பெயருடன் இணைந்ததன்று. 'பல்லவர் கோச்சிங்கர்' (செருத். 4) மாதேவி தனது செய்ய கையினைத் தடிந்த சிங்கர்' (கழற். 13) எனச்சேக்கிழாரும், காடவர் தங் குலமுவந்த கழலார் சிங்கர்' எனத் திருத்தொண்டர் புராணசாரமுடையாரும் இக்கழல் விசேடணபதமே என்பதை விளக்கி நிற்றல் காண்க, பல்லவருட்சிலர் சிங்கன் என்றே பெயர் பெற்றிருந்தனர் என்பது. "நலமிகு கச்சியார் கோவாயினானும்-சிலைமிகு