பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

220 ஆழ்வார்கள் காலநிலை நீர்ப் பெயற்று . மேற்காட்டிய அடிகளில் "நீர்ப்பெயற்று" என்ற "ஊரினெல்லையுள் மேல்புலத்துக் குதிரைகள் வட புலத்துப் பண்டங்கள் இவற்றைக் கொணரும் மரக் கலங்கள் சூழ்ந்த துறைகளைக் கொண்டதும், மிக வுயர்ந்த பண்டசாலைகளுடன் செல்வர்களான பரதர் வாழும் மாடத்தெருக்களை உடையதுமான பட்டின மருங்குள்ள சிறப்பும், அங்கே தேவருலகுக்கு ஒரு முட்டுக்கோல் போன்றதும், தன்னிடஞ்சார்த்திய ஏணி யால் ஏறற்கரிய தலையினையுடையதுமாகிய வேயா மாடத்தில் துறையறியாது செல்லும் மரக் கலங்களை அழைக்கும் கலங்கரை விளக்கம் உள்ள சிறப்பும் மிகவழ காகக் கூறப்படுதல் காணலாம், ஆகவே, முசிறி புகார் கொற்கை என்ற, சேர சோழ பாண்டிய நாட்டுத் துறைமுகங்கள் போலவே தொண்டைநாட்டுக்குச் சிறந்ததாய்ச் சங்கநாளில் விளங்கிய பட்டினம் இந் நீர்ப்பெயற்று என்பது பெறப் படும். இத்துறைமுகம் யாதெனின், அது கடன்மல்லையே யன்றிப் பிறிதில்லை என்க, இந்நீர்ப் பெயற்றுக்குப்பின் உத்தேசத்தலமான கச்சிப்பதியையே பெரும்பாணாற்றுப்படை முடிவாகக் கூறுதலின், இந்நகரினின்று அக்கச்சி நகரைச் சார்தல் எளிதென்பதே பாடியவர் கருத்தாதலுங் காண்க. கச்சியைத் தலைநகரமாகக் கொண்ட பல்லவர்கள் கப்பற்படையுடன் சென்று ஈழத்தைக் கைப்பற்றியதும் பிறவும் இத்துறைமுகவழியாகவே என்பர் சரித்திர