பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் வறிஞர். பல்லவர்காலத்து மட்டுமன்றிச் சோழராட்சியி லும் இத்துறைமுகநகர் பெருமை பெற்றிருந்ததேயாகும்." பெரும்பாணாற்றுப்படை. கூறுமாறு ' கலங்கரை விளக்கத்துடன் (Light-House)“எல்லாக் கப்பல்களுக்கும் ஒரு தரையெல்லை ஸ்தானமாக” இன்றும் இப்பட்டினம் உள்ளமை அறியத் தக்கது. இனி, “ நீர்ப்பெயற் றெல்லை போகிப்...பட்டின மருங்கி னசையின்'* என்பதற்கு-'நீர்ப்பெயற்றின் எல்லைக்குட்ட சென்று பட்டினமருங்கை அடையின்' என்பது பொருளாம் நீர்ப்பெயற்று என்பது பட்டினத்தின் வேறுபட்ட ஊராயின் அப்பட்டினப் பெயர் இன்னதென்பதைப் பாடியோர் குறியாமற்போகார், சிறுபாணாற்றுப் படையினும், 14 மணிகர் வைப்பின் மதிலொடு பெயரிய பனிநீர் மடுவிற் பட்டினம் படரின்" (152-3} என, எயிற்பட்டினம் என்ற கடற்கரையூரை அதன் பரியாயத்தால் மதிலொடு பெயரிய...பட்டினம்' என்று நல்லூர்நத்தத்தனார் குறிப்பிடுதலும் ஈண்டு ஒப்பிடத்தக்க தாம். ஆகவே, நீர்ப்பெயற்று என்பது கடற்கரையூரைக். குறிப்பதென்பதும், புகாரின் ஒரு பகுதியான பட்டினப் பாக்கம் போல அந்நீர்பெயற்றின் கடற்கரைப்பகுதி தனியே திரைவளம் பெற்றிருந்த தென்பதும் பெறப் படக்கூடியன. 1. 'நீடு நெய்தலுங் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால், ஆடு நீர் கொடி மாடமாமல்லையே யனைய' (பெரியபு. திருக் குறிப்புத். 41) எனத் தொண்டைநாட்டுக் கடற்கரையூர் களுள்ளே மாமல்லபுரம் சிறப்புற்றிருந்த செய்தியைச் சேக்கிழார் கூறுதல் காண்க.