பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 223 6. இராசான்ளம் என்ற நெல்லை:- பறவைப் பெயர்ப் படு வத்தம்' (பெரும்பாண். 305) என்றும்இவ்வாறே முன்னோர் பலரும் வழங்குமாற்றால் அறியப் படும். இவற்றுள், நீர்ப்பெயர்த்தென்று கூறிய ஆசிரியரே இராசான்னத்தின் பரியாயத்தைக் கூறி யுள்ளமுறை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இராசான்னம் என்பதனுள், அன்னம் என்பதனை மட்டும் பறவை என்பதனாற் குறிப்பிட்டுப் போந்த அப்புலவர் இராசபதத்துக்குப் பரியாயங் கூறாமையால், ஒரு தொடர்ப்பெயரை அதன் ஏகதேசம் பற்றி வேறு வகையாற் குறிப்பிடுவதும் அவர்க்கியல்பு என்பது நன்குபுலப்படத் தடையில்லை. அம்முறையே கடல்மல்லை என்பதனுள் கடல் என்பதற்கு மட்டும் பரியாயச்சொல் கொண்டு, நீர்ப் பெயர்த்து' என்பதனால் அக்கடற்கரை யூரை உருத்திரங்கண்ணனார் குறிப்பிட்டனர் என்று கொள்வதே ஏற்கும் என்க. இவ்வூரின் கடற்கரையல்லாத பகுதி-புகாரின் மருங்கூர்ப்பட்டினம் போல -அந்தணர் போன்ற உயர் குடிமக்கள் வாழ்ந்து வந்த இடம் என்பது“இரைதேர் மணிச்சிரல்....... கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த வேள்வித் தூணத் தசைஇ யவனர் ஒதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட வைகுறு மீனிற் பையத் தோன்றும் நீர்ப் பெயர்த்து" (பெரும்பாண். 313-19) என்று அவ்வூர் சிறப்பிக்கப்படுதலால் தெளியப்படும் 1. இவ்வகை நெல் சோணாடு முதலிய பிரதேசங்களில் வழங்குகின்றது. உயர்ந்த சாதிச் செந்நெல்லாகிய இதனை 'ராஜநாலு' என்பர் ஆந்திரர்.