பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

224 ஆழ்வார்கள் காலநிலை இனி, மாமல்லபுரத்தைக் கடன்மல்லைத் தலசயனம் என்று திருமங்கைமன்னன் இரண்டு திருப்பதிகங் களாற் பாடுகின்றார். ஆனால் அவ்வூர்க் கடற்கரைக் கோயிலிற் கண்டெடுக்கப்பட்டனவும் முதல் இராஜ ராஜசோழன் காலத்தனவுமான சாஸனங்களில் நகர மாமல்லபுரத்து ஜலசயளதேவர் தெற்கில் திருநந்தவனத்தே இருக்க”

  • இந்நகரத்து ஜலசயனத்து க்ஷத்ரிய சிகாமணிப் பல்லவீசுவரத்துத் தேவரும் பள்ளிகொண்டருளிய தேவரும் உடைய பட்டாரத்து

{S. 1. I. Vol. 1 , pp. 64, 67.) எனவருந் தொடர்களினின்று, 900-வருஷங்கட்கு முன்பு அக்கடற்கரைக் கோயில் ஜலசயனம்' என்றே வழங்கப் பெற்றிருந்த செய்தி தெரியலாம். மேற்காட்டிய இரண்டாம் தொடருள் 'பள்ளிகொண்டருளிய தேவரும் என்றது, ஆங்குக் கிடந்ததிருக்கோலம் உடையரான திருமால் மூர்த்தத்தையாம். நீர்ப்பக்கமாகத் திருமால் சயனங் கொண்டமையின் ஜலசயனம் என்று அக்கடற் கரைக் கோயிற்கு முன்னோர் பெயர்வழங்கியிருந்தனர் என்றும், அக்கோயிலின் முன் புறமாகவும் சார்பாகவும் 7-ஆம் நூற்றாண்டிறுதியில் இரண்டாம் நரசிம்ம வன்மனால் புதியவாய்க் கட்டப்பட்ட சிவாலயங்களும் ஜலசயனத்தைச் சார்ந்தனவாகவே பிற்பட்ட சோழர் காலத்தும் வழக்குப் பெற்றிருந்தன என்றும் கொள்ளத்தகும். இனி, கடற்கரையல்லாத நகரத்தே, கிடந்ததிருக் கோலம்உ டையரான திருமாலின்கோயில் வேறொன்றும் மாமல்லபுரத்து உள்ளது. இதுவும் அக்கடற்கரைக் கோயில்போலவே பழைமையான தென்பது, மேற்