பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 225 குறித்த இராஜராஜன்மகன் இராஜேந்திர சோழன் என்று கூறப்படும் பரகேசரி வர்மன் காலத்துச் சாஸனம் அக் கோயிலிற் காணப்படுதலினின்று தெளிவாகின்றது. தலசயனப்புறமான தையூர்' என்றுள்ள சாஸனத் தொடரால் அக்கோயிலடியாக மாமல்லபுரம் தலசயனம்' என்றே முன்பு அழைக்கப்பட்டமை தெரியலாம். தரையிடமாகத் திருமால் சயனம் உண்மை ' பற்றியும், சலசயனத்தின் வேறுபிரித்துக் காட்டல் வேண்டியும் அக்கோயில் தலசயனம் எனப்பட்ட தாதல் வேண்டும். ஆகவே, தலசயனம் சலசயனம்' என்ற கோயில்கள் திருமாற்குப் பழைமையாகவே மாமல்ல புரத்திற் சிறப்புற்றிருந்தன என்பது பெறப்படுகிறது. மாறுபாடு இவற்றினின்று, திருமங்கைமன்னன் கடன் மல்லையைப் பற்றிப் பாடிய பதிகங்களிரண்டனுள் முன்பதிகம் - தலசயனத்தைப்பற்றியது என்றும், கடற்கரைக் .1. Thc Inscriptions of Madras Presidency, Cg: No 81 B 2. Si.i. Vol. iii p. 356 3. சோணாட்டுச் சிறுபுலியூரைச் சலசயனத் தலமாகத் திருமங்கை மன்னன் பாடுதலும், பாண்டி நாட்டுத் திருப்பத்தூர்க் கோயிலைச் 'சலசயனம்' என்று பழைய பாண்டிய சாஸனம் (Ep. Rep. 131, of 1908) கூறுதலும் ஈண்டு அறியத்தக்கன. திருமாலின் சயனங்கள்:-சலசயனம், தலசயனம், புஜங்கசயனம், உத்யோக சயனம், வீரசயனம், போக சயனம், தர்ப்பசயனம், பத்ரசயனம், மாணிக்க சயனம், உத்தானசயனம் எனப் பலவகையாகத் தெரி கின்றன, “மலர்ச்சயனம் சலசயனந் தோற்சயன மாதி, பழிப்பில் பதினைந் தாகுஞ் சயனம்” எனத் திவாகரர் (திவா. 18, 67) பதினைந்து சயனங் கூறுவர். 15