பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

226 ஆழ்வார்கள். காலநிலை கோயிலைப்பற்றிய பாசுரமுள்ள பின்பதிகம்-சல சயளத்தைப் பற்றியது என்றும், பிற்காலத்தில் இரண்டு பதிகங்களுமே தலசயனத்திருமாலைப் பற்றியனவாகக் கருதப்பட்டுப் பாடமாறலாயிற்று என்றும் நாம் ஊகிக்க இடம் ஏற்படுகின்றது. இனி, ஊரினகத்துள்ள கோயிலடியாகத் தலசயனம் என்ற பெயர் அவ்வூர்க்கே வழங்கியது போலக் கடற் கரைக்கோயிலடியாகச் சலசயனம் என்ற பெயர் அக் கடன்மல்லைக்கு முன்பு வழங்கியிருத்தலுங் ' கூடியதே யாகும். அவ்வாறாயின், 'நீர்ப்பெயர்த்து' என்று உருத் திரங் கண்ண னார் குறித்தது அச்சலசயனம் என்ற பெயரைக் கருத்துட் கொண்டதாகவும் கொள்ளலாம்.! எங்ஙனமாயினும், சங்கநூலுட் கண்ட 'நீர்ப்பெயர்த்து' என்பது, கடன்மல்லையின் பழம்பெயரென்பதில் தடை யில்லை என்க.. இவற்றால், கடன்மல்லை சங்ககாலத்து விளங்கிய பழைய பட்டினமே என்பதும், அப்பட்டினத்துள்ள தல சயனம் சலசயனம் என்ற திருமால் கோயில்கள் இரண்டனையும் திருமங்கை மன்னன் பாடியவராவர் என்பதும், 7-ம் நூற்றாண்டிறுதியிற் பட்டமெய்திய 1. இப்பகுதியை நான் படித்துக்காட்டியபோது, மஹா வித்வான் : ஸ்ரீ ரா.இராகவையங்கார் ஸ்வாமி நீர்ப்பாயற்றலை என்பது பழம்பாடமாயின், அது ஜலசயனம் என்பதற்கு முழுப்பரியாயமாக அமைந்து சிறப்புறும்--என்று கூறிய கருத்து ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. 2. திருநீர்மலை போன்ற ஊர்கள் கடற்கரைக்கு நெடுந் தூரத்துள்ளமையால், நீர்ப்பெயர்த்தெல்லையில் பட்டின முள்ளதாகக் கூறும் புலவர் கூற்றுக்கு, அவை ஏற்புடைய வாகாமை கண்டுகொள்க.