பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 227 வனும், சுந்தரமூர்த்திகளாற் புகழப்பட்டவனுமான இராஜசிம்மபல்லவனாற் புதிதாக எடுக்கப்பட்ட சிவாலய மொன்றைத் தம்பதிகத்துட் குறிப்பிடுதலின், நம் பெரியார் அவ்விருவர் காலச்செய்திகளையும் நன்கறிந்த வராதல் வேண்டுமென்பதும் விளங்கத் தடையில்லை, புத்தர் சிலை திருடியவர் திருமங்கைமன்னன் நாகபட்டினத்துப் பௌத்தப் பள்ளியொன்றில் இருந்த பொற்படிமத்தை உளவறிந்து களவிற்கைப்பற்றி அது கொண்டு திருவரங்கத் திருமதில் கட்டினர் என்று குருபரம்பரைகள் கூறு கின்றன. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடார {Burma) வேந்தனான ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மனால் நாகபட்டினத்தில் 'சூடாமணி பத்மவிஹாரம்' என்ற பௌத்தப்பள்ளி ஒன்று கட்டப்பட்டதென்றும், அதற்கு முதலிராஜராஜசோழனால் கி, பி. 1008-ம் வருஷம் ஆனைமங்கலம் என்ற கிராமமொன்று தானமளிக்கப் பட்டதென்றும் சாஸனத்தால் அறியப்படுகின்றன.! இச்செய்திகளைக் கொண்டு, அவ்விஹாரத்திருந்த பௌத்தவிக்கிரமே திருமங்கையார் கைப்பற்றியதாக வேண்டும் எனவும், எனவே அவ்வடியார் காலம் 11-ம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டதாக வேண்டும் எனவும் கருதுவாரும் உளர். இப் பௌத்தப்பள்ளியைப் பற்றி நமக்கு முதன் முதல் தெரிவிப்பது, அவ்விராஜராஜசோழன் மகன் முதலிராஜேந்திரன் காலத்தில் உண்டான சாஸனமே, 1. The Large Leidea Grant -Tamil and Sanscrit Inscriptions. No. 30, PP. 204-24.