பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

228 ஆழ்வார்கள் காலநிலை அதனால், 1013-முதல் 1045-வரை ஆண்ட அவ்விராஜேந் திரன் காலத்தில், ஷ விஹாரம் நன்னிலையில் இருந்த தென்பது விளங்கும். ஸ்ரீமந் நாதமுனிகளுக்குத் திருப் பேரனாரான ஸ்ரீஆளவந்தார் வைஷ்ணவாசாரியத் தலைமை வகித்து விளங்கியது இக்காலமேயாம். ஆகவே, முற்கூறிய கொள்கைப்படி கொண்டால், திருமங்கைமன்னன் அவ்வாளவந்தார்க்கும் பின்பிருந்த வர் என்றே கொள்ளநேரும், ஆயின், இதனிலும் அசங் கதமான கொள்கை பிறிதில்லை என்க, திருமங்கைமன்னன் களவுத் தொழிலில் பேர் போனவர் என்றும், அத்தொழிற்றிறமை காட்டிப் பௌத்தப்படிமத்தைக் கவர்ந்தவரென்றும் கூறப்படும் கதைகளினுண்மையே ஆராய்ச்சிக்கு உரியதாக உள்ளது. பழமையான பௌத்த பள்ளிகள் ஆழ்வாா -" அலைநீ ருலகுக் கருளே புரியும்' காரார் புயற்கைக் கலிகன்றி" என்றும் பிறவாறும் தம்மைப் பற்றிக் கூறியவற்றுடன் அக்கதைகள் மாறுபடுதலை மேலே விளக்கினேன். அவற்றை மெய்யாகவே கொள்ளி னும், அப்படிமம் இருந்த நாகப்பட்டினத்துப் பௌத்தப் பள்ளி 8-ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட தொன்று என்று கருதத்தக்கதேயன்றி, 11-ம் நூற்றாண்டினதாகக் கொள்ளச் சிறிதும் இடமில்லை என்பது திண்ணம். அக்கரை நாட்டுப் பௌத்தவேந்தனொருவன் தமிழ் நாட்டில் விஹாரமொன்று கட்டுதற்கு நாகப்பட்டினத் தைக் குறிப்பிட்டதனால், அது ளெத்தர்கட்குச் சிறந்த தலம் என்பது பெறப்படும். அவ்வாறே நாகப்பட்டினத் தைப் பற்றிய பழைய வழக்கும் உண்டு. அதனால், வேறு பௌத்தப்பள்ளிகளும் அவ்வூரில் முன்பே இருந்திருத்தல்