பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 229 வேண்டும் என்றும், அவை யாவும் சிதைவுற்ற பிற்காலத்தே கடாரவேந்தனால் தன் பெயரிட்டுப் புதிய விஹாரமொன்று ஆங்குக் கட்டி முடிக்கப்பட்ட தென்றும் கொள்வதே நன்கு பொருந்துவதென உணர்க. இனி, திருமங்கைமன்னன் பாடியருளிய தொடர்கள் சில அவர் காலத்தனவாகிய சாஸனவாக்கியங்களோடு பெரிதும் ஒற்றுமைப்பட்டிருத்தற்குச் சில உதாரணங் கள் காட்டுவேன். அவை வருமாறு: பல்லவமல்லன் சமுத்திரகோஷம்” என்னும் பெயருடைய கடுமுகவாத்யத்தைத் தனக்குச் சிறப்பாயு டையனாயிருந்தவன் என்றும், அதனைச் சளுக்கியனான இரண்டாம் விக்கிரமாதித்தன் (731-746) அப்பல்ல வனுடன் நடத்திய போரிற் கைப்பற்றினான் என்றும் கேந்தூர்ச் சாஸனங் கூறுகின்றது. இவ்வாத்தியத்தைக் குறிக்கும் அச்சாஸன வாக்கியமாவது கடுமுகவாதித்ர ஸமுத்திரகோஷாபிதான என்பது. இத்தொடர், திருமங்கைமன்னன் அப்பல்லவனை விசேடிக்குமிடத்து கடல்போன் முழங்குங் குரற்கடுவாய்ப் பறையுடைப் பல்லவர்கோன் (பெ. தி. 2, 10, 9) என்று பாடுதலுடன் ஒப்பிடற்குரியது. கடுமுக வாதித்ரம்-கடுவாய்ப்பறை. கடன் முழக்கம் போன்ற ஒலியுடைமையால் 'ஸமுத்திரகோஷம்' எனப் பெயர் பெற்ற கடுவாய்ப்பறை பல்லவமல்லனுக்கே உரிய தென்பார் கடல்போன் முழங்குங் குரற்கடுவாய்ப் 1. Ep.Ind.Vo.1x, No 29. P. C. 205. SI. I. III, 146.