பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 231 “இருக்கு முதல்வேதம் பௌடிக மெனப்படும். "இரண்டாம் வேதந் தைத்திரிய மென்ப (ஒலிபற்றிய. தொ. 75, 6) என்று கூறுதலால் அறியலாகும். பிங்கலநிகண்டினும் இவ்வாறே அவற்றின் பெயர் கூறப்பட்டுள்ளன. 8,9ஆம் நூற்றாண்டுச் சாஸனங்களும் பவிழிய சூத்திரம், பவிழிய சரணம், தைத்ரியசரணம் என அவ்வேதங்களை வழங்குதல் அறியத்தக்கது. திருமங்கை மன்னன் கூறியவற்றுள் சந்தோகன் என்பது சாந்தோக்கிய சாமமறிந்தவன் என்னும் பொருளது; சாந்தோக்கிய சாமம். தலவகார சாரம்' என்ப, பவுழியம் என்பது இருக்குவேதத்தினை; பல இருக்குக்களை யுடைமையின் பஹ்வ்ருசம் என்று அவ்வேதம் பெயர் பெறும் என்பர். அதுவே தமிழில் பவிழியம், பௌழியம், பௌடியம், பௌடிகம் எனவும் திரிந்துவழங்கலாயிற்று, தைத்திரியம் என்பது கிஷ்ணயகர் வேத சாகைகளுள் ஒன்றாம். இப்பகுதி தென்னாட்டிற் பயிற்சி மிகுதியுடைமையின், இதுவே எசுாவேதமாக அக் காலத்துக் கருதப்பட்டதாக வேண்டும், இவ்வாறு இருக்கு எசுக்களுக்கு ஆழ்வார் கூறும் பெயர்கள் பண்டை நூல்வழக் கோடும் சாஸவைழக்கோடும் பெரிதும் ஏற்புடையவாமாறு கண்டுகொள்க.. 1. S. I. I. vol ii, p. 328; vol. ii, p. 370. 2. T. A. S. vol. i, p. 9. 3. Ep. Rep. No. ii, 1906. 4. Ibid 76, of 1914. 5. தொல்காப்பியப் பாயிரவுரையுள் நச்சினார்க்கினியர் (நான்மறையாவன) “தைத்திரியமும் பெளடிகமும் தலவ காரமும் சாமவேதமுமாம்; இனி இருக்கும் யசுவும் சாமமும்