பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

234 ஆழ்வார்கள் காலநிலை என்ற கண்ணிகளால் வாசவதத்தையின் வரலாறு கூறுவர். இப்பெண்மணி வச்சநாட்டரசனான உதயன னாற் காதலிக்கப்பட்டு மணம் புரியப்பெற்ற பெருந்தேவி யாவள், உதயனன் என்பான், அருச்சுனன் புதல்வனான அபிமன்னியுதொடங்கி இருபத்தைந்தாம் தலை முறை யிற்பிறந்த பெருந்தகையரசன், வாசவதத்தை, சிறைப் பட்டிருந்த அவ்வுதயனனைக் காதலித்து உபாயத்தால் அவனைச் சிறைவிடுத்து உடன்சென்று அவனை மணந்து வாழ்ந்த சரிதவிரிவை, குணாட்டியரது பிருகத்கதையின் வழிவந்த வட, நூல்கள் பலவற்றாலும், பெருங்கதை . முதலிய தமிழ் நூல்களாலும் நன்கறியலாகும். மடலூர்தல் இனி, திருமங்கையன்னது திருமடல்களைப்பற்றி ஒன்று கூறுதற்குண்டு. மடலூர்தல்' என்பது, தான் காதலித்தபெண்ணை அடையப் பெறாதவிடத்து ஆடவர் நிகழ்த்தும் பிராயோபவேசம் அல்லது தற்கொலைமுறை களுள் ஒன்றாம். இது, பழைய தமிழ்மக்கள் கையாண்ப வழக்கு என்பதை யான் (தொல்காப்பியப் பொருளதி காரவாராய்ச்சி” யுள் (பக். 31-33) நன்கு விளக்கி யுள்ளேன். இங்ஙனம் மடலூர்தலென்பது, ஆடவர்மட்டுஞ் செய்தற்குரியதேயன்றிப் பெண்டிர் எந்நிலையிலுஞ் செய்யத்தக்கதன்று என்று தொல்காப்பியர் விதிப்பர். ஆயின், திருமங்கை மன்னன் தாமருளிய மடல்களிலே பெண்ணொருத்தி திருமாலைக் காமுற்று மடலூர்வதாகப் பாடினராதலால் அதற்குப் போக்கென்னை யெனின்அப்பெண் மடலேறியதாகக் கூறாது ஏறுவேன்' என்ற துணையேயாதலின் அமையும் என்பர் முன்னோர்.