பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 239 பெருமாள்' 'நாவீறன்' என்ற திருநாமங்களால் இவ் வாழ்வாரைச் சிறப்பிக்கலாயினர் முன்னோர் என்க. ஸ்ரீவைஷ்ணவ பரமாசாரியரான இராமாநுஜ முனி வரரை- குறையற் கலைப்பெருமான், ஒலிமிக்க பாட-லை யுண்டுதன் னுள்ளந் தடித்ததனால், வலிமிக்க சீயம்' என்று அவர்காலத்தான்றோர் புகழ்வரெனின், இப் பெரியாரது வாக்கின்பெருமை நம்மனோரால் மதிப்பிட வல்லதோ? அம்முனிவர்க்குப் பின் பரமாசாரியபதம் வகித்த வரும், ஆழ்வார் திருவாக்குக்களின் அருமை பெரு மைகளை யெல்லாம் உலகிற்கு வியாக்கியான ரூபமாக வெளியிட்டருளியவருமான ஸ்ரீ பராசரபட்டர்" ஏனையாழ் வாரினும் இப்பெரியாரிடமே பெரிதும் ஈடுபாடுடைய ரெனின், வேறு யாம் கூறற்குரியது யாது? பட்டரின் திருத்தந்தையாரும் ஸ்ரீ ராமாநுஜரது பிரதமசிஷ்யருமான கூரத்தாழ்வான் இவ்வாழ்வாரைப் பற்றி அருளிய அழகிய தனியனைக்கூறி இப்பெரியார் வரலாற்றை இவ்வளவில் நிறுத்துகின்றேன்: << நெஞ்சுக் கிருள்கடி தீப மடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்ல வமுதந் தமிழகன் னூற்றுறைகள் அஞ்சுக் கிலக்கிய மாரண சாரம் பரசமயப் பஞ்சுக்,கனலின் பொறிபர காலன் பனுவல்களே 1. இராமாநுச நூற்றந்தாதி, 88. 2. ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை வியாக்யானம் (பெ. தி. 16, 3, 4) )