பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 15 - இவற்கல், திருமாலடியாரான துறவிகள், சங்க காலத்தும் அதற்கு முன்பும் தமிழ் மக்களாற் பெரிதும் போற்றப்பட்டு வந்தவர் என்பது தெளிவாம். திருமாலை வணங்குங் கொள்கை முற்காலத்தே 'பிரபலம் பெற்றிருந்ததென்பது, மணிமேகலைச் சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதையுள் வைணவவாதம் கூறப்படுதலால் அறியப்படும், 4 காதல் கொண்ட கடல்வணன் புராண மோதினன் நாரணன் காப்பென் றுரைத்தளன் (மணிமே . 27, 98-9) என்று சாத்தனார் கூறுதலினின்றும் விஷ்ணுபுராணம் போன்ற திருமாலைப்பற்றிய புராணங்கள் சங்ககாலத்தே பெருவழக்குப் பெற்றிருந்த செய்தி தெரியலாம். வைணவப் புலவர்கள் சங்க காலத்தேயிருந்த நல்லிசைப் புலவர் பலர் பரமபாகவதர்களாக விளங்கினர். பரிபாடலில் திருமாலைப்பற்றிச் சிறப்பித்த கடுவனிளவெயினனார், கீரந்தையார், நல்லெழினியார் முதலியோர் பாடல்கள், நீரும் அவர் திறத்து எவ்வம்பட வேண்டா ' என எடுத்துக் காட்டி. அவர் (பகவர்) தெருட்டியது” (கலித். 9, அவ.) என்று இத்துறைச்செய்தியை நச்சினார்க்கினியர் விளக்குதல் காண்க. இம்முக்கோற் பகவர் திருமாலடியாராக இருத்தல் பற்றியே அவரைக் கூற ஒருப்படாது, அவர்க்குப் பிரதியாகப் பாசுபதர் காளாமுகர் போன்ற சிவபத்தராகிய விரதியரை, அவ்வாறு செவிலி உடன்போக்கில் வினாவுவதாகச் சிவனடியாரான வாதவூரடிகள் தம் திருக்கோவையுள் (242) பாடியிருத்தல் இங்கு அறியத்தக்கது.