பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

242 ஆழ்வார்கள் காலநிலை புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாங் கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதான் தலையறுப் புண்டுஞ் சாவேன் சத்தியங் காண்மினையா சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவ னாவான்" (7) “வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக் கியர்கள் நின்பாற் பொறுப்பரி யனகள் பேசிப் போவதே நோய தாகிக் குறிப்பெனக் கடையு மாகிற் கூடுமேற் றலையை யாங்கே அறுப்பதே கருமங் கண்டா யரங்கமா நகரு ளானே' (8) என்ற பாசுரங்களினின்று தெரியவருகின்றது. இவற் றால் திருமால்பால் இப்பெரியார்க்கிருந்த பத்தித்திறம் இத்தகையதென்பது விளங்கும், மிக உயர்குலத்தோரும் மிகத் தாழ்குலத்தோருமான திருமாலடியார் பலர் திருவரங்கப் பெருமான் திருமுன்றிலில் சாதிவேற்று மையற ஒருங்கு குழுமி, ஒருவரையொருவர் தெய்வ சமானராகக் கருதி வழிபட்டு வந்தனர் என்பதும், அக் குழுவினருள் அத்தகைய வேற்றுமை பாராட்டுதல் பெரியதோர் அபசாரமும் இழுக்குமாகக் கருதப்பட்டு வந்ததென்பதும்--- “பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதிமார்கள்! இழிகுலத் தவர்க ளேனு மெம்மடி யார்க ளாகில் தொழுமினீர் கொடுமின் கொண்மி னென்றுநின் னோடு மொக்க வழிபடவருளி னாய்போன்ம் மதிட்டிரு வரங்கத் தானே (திருமாலை.42) அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதித் தமர்களிற் றலைவராய சாதியந் தணர்க ளேனும்