பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருப்பாணாழ்வார் 245 ரென்றும், கருணாமிருதமான இவரது கானங்களைச் செவிமடுத்துவந்த சேஷசாயியான அவ்வெம்பெருமான் அப் பெரியாரைத் தமக்கு அந்தரங்கராகச் செய்து கொள்ள விரும்பித் தம் திருமுற்றத்தடியார் குழுவில் ஒருவரான லோக சாரங்க முனிவர்க்கு நம் பேரடியானான பாணனை நெகிழநினையாதே நம்பக்கல் அழைத்து வருக' என்று கனவில் ஆணையிட்டருள, அவ்வாறே அம் முனிவர் சென்று நதிக்கரையில் வழக்கம் போல் நின்றுருகும் பாணரை வலிந்தெடுத்துத் தம் தோளிற் கொண்டுவந்து அரங்கமுடையான் திருமுன்பு நிறுத் தினர் என்றும், அப்போது அழகிய மணவாளனான அப் பெருமானைத் திருவடிமுதல் திருமுடி.காறும் அனு பவித்த பாண் பெருமாள், அவ்வனுபவ மிகுதியால் தமக்குண்டான பரவசநிலையை 1 அமலனாதி பிரான்" என்று தொடங்கும் பத்துப்பாசுரங்களால் உலகத் தார்க்கு வெளியிட்டருளி, முடிவில் அத்திருமால் திருவடி களில் ஐக்கியமாயினர் என்றும் குருபரம்பரைகளில் வைபவங் கூறப்பட்டுளது. இவ்வரலாறு தவிர இவ்வாழ்வார் காலநிலையாகத் தெரியக்கூடிய செய்தி வேறில்லை. இவர் திருவரங்கச் செல்வரை நேரில் அனுபவிக்க நேர்ந்தபோது " அமல னாதிபிரா னடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் கமலபாதம்வந்தென் கண்ணினுள்ளள வொக்கின்றவே" அணியரங்கன் என்னமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று பாடிய பாசுரங்கள் பத்தும், இவரது உருக்கமும் உண்மையுமான அடிமைத்திறத்தை விளக்கவல்லன.