பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

243 ஆழ்வார்கள் காலகில இச் சேரவேந்தர் பெருந்தகை அருளிச்செய்த திவ்யப்பிரபந்தம், 105-பாசுரங்கள் கொண்ட பெருமாள் திருமொழி என்பது. இத்திருமொழியுள்-தாம் க்ஷத்திரிய வருணத்தைச் சார்ந்தவர்' எனவும், கொங்குநாட்டின் வேந்தர்' எனவும், கொல்லி என்ற தலைநகரையுடையர்' எனவும்- தம்குலம் நாடு நகர்களை இப்பெரியார் கூறுவர். இவர் காலத்தே பரமபாகவதர்களான தொண்டர் பெருங்குழாம் அணியரங்கன் திருமுற்றத்தை அலங் கரித்து விளங்கியது என்பதும், அக்குழவினர் அரங்கநகரினின்றும் தமிழ்நாடெங்குஞ் சஞ்சரித் தவராய், உத்தமமான வைஷ்ணவதர்மங்களை உலக மறிய உபதேசித்து யாவரையும் அடியராக்கிவந்தன ரென்பதும்“ ஆறு போல் வருங் கண்ண நீர்கொண் டரங்கன் கோவிற் றிருமுற்றஞ் சேறுசெய்யும் தொண்டர்" (2, 3) ( ஆதி யந்த மனந்த மற்புத மான வாளவர் தம்பிரான் பாத மாமலர் சூடும் பத்தி மிலாத பாவிக ளுய்ந்திடத் தீதில் நன்னெறி காட்டி யெங்கும் திரிந்த ரங்கனெம் மானுக்கே காதல் செய்தொண்டர்க் கெப்பி றப்பினுங் காதல் செய்யுமென் னெஞ்சமே" (2, 6) என்ற இவர் பாசுரங்களால் வெளியாகின்றன. 1. எங்கள் குலத் தின்னமுதே யிராகவளே தாலேலோ' {பெருமாள் திருமொழி, 8. 3) 2. 'கொங்கர் கோன் குலசேகரன்' (க்ஷ. 3, 9. ) 3, கொல்லிநகர்க் கிறை' (ஷ, 6.10) ‘கொல்லி காவலன்' (ஷை. 9. 10) 4. “அணியரங்கன் திருமுற்றத் தடியார்தங்கள், இன்பமிகு பெருங்குழுவு ' கண்டியானு மிசைந்துடனே யென்று கொலோ விருக்குநாளே" | 1.10)