பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமான் 249 வைஷ்ணவ 'தர்மமான பிரபத்தி மார்க்கத்தைத் தீதில் நன்னெறி என இப்பெரியார் இருமுறை வழங்குதல்! இங்கறியத்தக்கது. இத்தகைய உத்தம தர்மத்தை நாடெங்கும் பரப்பிவந்த அவ்வடியார் குழாத்துள் தாமுங்கூடி ஆடிப்பாடி அகங்களித்து நிற்கும் நிலையையன்றி அரசவின்பத்தே தமக்குச் சிறிதும் பற்றின்மையைப் பல பாடல்களாலும் வெளி யிடுவர் இப்பெரியார், அப்பாசுர மொன்றனுள்-- 44 ஆடிப் பாடி பரங்க வோவென் றழைக்குந் தொண்டரடிப்பொடி ஆட நாம்பெறிற் கங்கை நீர்குடைந் தாடும் வேட்கையென் னாவதே” (2, 2) என்ற அடிகளிலே, தொண்டரடிப்பொடி என்ற தொடரை இவர் ஆளுதல் இங்குக் குறிப்பிடத்தகும். இதனினின்று தொண்டரடிப் பொடியாழ்வாரைத் தம் திருவுள்ளத்துக் கொண்டு இத்தொடரை வழங்கினரோ இப்பெரியார் என்ற சங்கை தோற்றுகின்றது இஃதன்றேல், குலசேகரப் பெருமாள் வழங்கிய தொடரை விப்பிரநாராயணரான அப்பெரியார் தம் தாஸ்யநாம மாகத் தரித்தனரெனல் வேண்டும். ஆனால் அணியரங்கன் திருமுற்றத் தடியார் குழுவில் தொண்டரடிப்பொடிகளும் ஒருவராயிருத தலையும், அக்குழுவின் பெருமைகளையே தம் திருமொழி இரண்டாம் பதிகத்தினும் பிறவிடங்களினும் இவ் வாழ்வார் பலபடச் சிறப்பித்தலையும் நோக்குமிடத்து, முற்கூறிய கருத்தே ஏற்புடையதாகின்றது. எங்ஙனமாயினும், திவ்யசூரிசரிதங் கூறுமாறு திருமங்கையார், தொண்டரடிப் பொடிகள், குலசேகரப் 1. இதில் நன்னெறி நிற்கவல் லாதுசெய், நீதியார்'(3,5).