பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் : 251 செய்தற்குரியாரை அமைச்சர் ஆராய்ந்து, முடிவில் அஞ்சைக்களத்து வாழ்ந்துவந்த பெருமாக் 'கோதை, யாரை அழைத்துவந்து முடிசூட்ட, அவர் நீதிவழுவாது அரசியலை நிகழ்த்திவந்தனர் என்றும், இச்சேரர் . தம் மாட்சியிறுதியில் சுந்தரமூாத்திகளுடன் அளவளாவி, அவருடன சேர்ந்து கயிலைசென்றனர் என்றும் சேக்கிழார் தம் நூலுட்பாடுதல் பலரும் அறிந்தது. இவ்வரலாறுகளுள், சேரமான் பெருமாளுக்கு முன்பு; ஆட்சிபுரிந்த கேரளவேந்தன் தன்னரசு துறந்து. தவசியாயினன் என்ற செய்தியே இங்குச் சிறப்பாகக் குறிக்கொண்டு நோக்கத்தக்கது. இது பற்றிய. சேக்கிழார் பாடல் அடியில்வருமாறு:--- * நீரின் மலிந்த கடலகழி நெடுமால் வரையிற் கொடிமதில்சூழ். சீரின் மலிந்த திருநகர மதனிற் செங்கோற் பொறையனெ னும் காரின் மலிந்த கொடை நிழனமேற் கவிக்குங் கொற்றக் குடை நிழற்கீழ்த், - தாரின் மலிந்த புயத்தரசன் றரணி நீத்துத் தவஞ்சார்ந்தான் எனக காண்க. முற்கூறியபடி சுந்தரமூர்த்திகளும் சேர மான்பெருமாளும் சமகாலத்தவர் எனவே, அச் சேர மானுக்கு முன் ஆட்சிபுரிந்து அரசு துறந்த பொறை. யனும் சிறிதுமுன் அக்காலத்தவனே என்பது சொல்ல வேண்டுவதன்று. இங்ஙனம் 'தரணி நீத்துத் தவஞ்சார்ந்தவ'ராகக் கூறப்பட்ட சேரவேந்தர், 7,8-ஆம் நூற்றாண்டினரான" 1. பெரிய புராணம்-சேரமான் பெருமாணாயனார் புராணம் 1-முதல் 16-வரையுள்ள செய்யுட்களை நோக்குக.