பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 253: எங்ஙனமாயினும், தரணி நீத்துத் தவஞ்சார்ந்த வராகச் சேக்கிழார் கூறும் பொறையன் (= சேரன்) தம்மரச வின்பத்தை நீத்து அணியரங்கன் திரு முற்றத்தை யடைந்து பிரபத்தி நிஷ்டையிற்சிறந்த தபோதனராய்விளங்கிய இவ்வாழ்வாரின் வேறல்லர் என்றே தோற்றுகின்றார். குலசேகரப்பெருமாள் தம்மைக் கொங்கர்கோன் என்றும் கொல்லிநகர்க்கிறை' என்றும் கூறிக் கொள்ளு. தல் மேலே அறியப்பட்டது, இத்தொடர்களால் கொங்கு நாடு இவரது ஆட்சிக்குள்ளடங்கிய தேசமென்பதும்... கொல்லிநகரென்பது அந்நாட்டுள் விளங்கிய இவ் வரசரது தலைமைநகரம் என்பதும் நன்கு பெறப் படும். கருவூர் -வஞ்சிநாடு சேரநாடு என்பது சேலம் கோயம்புத்தூர் ஜில்லாக். களும், குடகு மலையாள தேசங்களும் ஏறக்குறைய அடங்கியதாய்ச் சங்ககாலமுதலே சேரர்க்கு உரிமையாக நின்ற பிரதேசமாம். இக்காலந்தொடங்கிச் சேரரது இராசதானியாக விளங்கிய நகரம் கருவூரேயாம். கொல்லிமலைப் பக்கத்ததும் ஆன்பொருநை என்ற ஆமி' ராவதிநதியின் கரைக்கண்ணதுமாகிய இப்பேரூரையே பண்டை நூல்கள் யாவும் வஞ்சிமாநகர் என்று கூறுவன. இங்ஙனம் கருவூரைத் தலைநகராகக்கொண்ட சேரமண்டலத்துள், அவ்வூரைத் தன்னுட்பெற்றுள்ள கொங்குநாடு ஒரு சிறந்த பகுதி என்பது சொல்லாதே. அமையும். இதுபற்றியே 'கொங்கர் கோமான்' என் பதைச் சேரன்பெயர்களுள் ஒன்றாக நிகண்டு முதலியவை