பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

254 ஆழ்வார்கள் காலநிலை வழங்கலாயின, 'கொங்கரை யட்ட களத்து' வஞ்சிக்கோ வட்ட களத்து' எனக் கொங்குநாடும் வஞ்சிநகரும் சேரர்க் தச் சிறப்புடைனயவாகப் பொய்கையார் கூறுதலும்' இக்கருத்துப்பற்றியே என்க, தென்னாடன் குடகொங் --கன் சோழன்' என்றார், திருமங்கை மன்னனும். இங்ஙனம் சேரமண்டலத்துத் தலைநகராக விளங் .கிய கொங்குநாட்டுக் கருவூரின் நிலைமை பிற்காலத்தே மாறலாயிற்று. சங்ககாலத்துக்குப் பின்னர், அஃதாவது உத்தேசம் 7-ஆம் நூற்றாண்டு முதலாக, ஆற்றல் * மிக்கிருந்த பாண்டியராற் கொங்கு பலமுறை ப.ை.. 'யெடுக்கப்படவும், அதன்கணுள்ள தலைநகர் சிலசமயங் களில் அவ்வரசர் கைவசப்படவும், நேர்ந்தது. * அக்கால முதற்றான் சேரவேந்தர் தம் பழைய தலை நகரையே முற்றும் நம்பியிராமல், மேல்கடற் பக்கத் 1. களவழி நாற்பது, 14, 39. 2. 7 ஆம் நூற்றாண்டிலே சம்பந்தமூர்த்திகளால் திருத் *திப்பணி கொள்ளப்பெற்ற நெடுமாறன், கொங்கு நாட்டிற் சேரனுடன் பலபோர்கள் நடத்தி அதன் பகுதியைக் சைப் பற்றியவன் என்பது இறையனார்களவியலுரை, வேள்விகுடிச் சாஸனங்களால் அறியப்படும். இவ்வாறே, அப்பாண்டியன் மகன் கோச்சடையனைக் கொங்கர் கோமான்' என்றும், அவன் மகன் மாறவர்மனை 'வஞ்சி...மதில்புதுக்கியவன்' என்றும், அவன் மகன் நெடுஞ்சடையனைக் 'கொங்கபூமி யடிப்படுத்தவன்' என்றும் வேள்விகுடி சீவரமங்கலச் செப் பேடுகள் கூறுதலும், சேரர், பவ்லவருதவியால் தம் தலை நகரான கருவூரை ஒருகால் மீட்கமுயன்ற செய்தியைFஉலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னிமா மதில்சூழ் கருவூர்வெருவ... வென்றான்' என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுதலும் கண்டுகொள்க.