பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

255 குலசேகரப்பெருமாள் 'துள்ள மகோதை என்ற கொடுங்கோளூரினுந் தங்கி ஆட்சிபுரியலாயினர். 1 இக்கடற்கரையூர் மேற்றேயத்து யவனமரக்க லங்கள் மிளகு முதலிய பண்டங்களை ஏற்றி வியாபாரஞ் செய்து வந்த பழந்துறை முகமும், சுள்ளி என்ற நதிப் பக்கத்ததுமான முசிரியின் ஸ்தானத்தில் தோன்றிய பட்டினமாகும். சோழர்க்குக் காவிரிப்பூம் பட்டினமும் 'பாண்டியர்க்குக் கொற்கையும் போலச் சேரர்க்குக் கரு வூரையடுத்துச் சிறந்த பேரூர் இதுவே யெனலாம். கொடுங்கோளூரைக் கருவூரென்றேனும், கருவூ ரைக் கடற்கரைப் பட்டினமென்றேனும் முன்னோரும் பின்னோரும் யாண்டும் வழங்கக் காணாமையின், கருவூ ராகிய வஞ்சி சேரரது உண்ணாட்டுத் தலைநகரென் பதும், மகோதையாகிய கொடுங்கோளூர் அவரது துறைமுகநகரம் என்பதுமே தெளிவாமென்க, 1. 'வஞ்சியை விட்டிகலஞ்சிய கோதை மகோதை முதிற்கதவும், பறிப்ப..பெயரும்...மன்னவனே' என்ற கூத்தர் வாக்கினும் (குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்) இக்கருத்தே தெளிவாதல் அறியத்தக்கது. (தக்க, பக். 362) 2, கருவூராகிய வஞ்சியே சேரர் தலைநகர் என்பது. யான் எழுதி வெளியிட்ட சேரன் செங்குட்டுவன்" சரித்தி ரத்தாலும், மகாவித்வான் ஸ்ரீ உப, வே. ரா இராகவையங் கார் ஸ்வாமி பால் பேராராய்ச்சிகாட்டி எழுதப்பெற்ற *வஞ்சிமாநகர்” என்ற தனி நூலாலும் வெள்ளிடைமலை போல் விளக்கமாம். இக்கருவூர், 2200-ஆண்டுகட்கு முன்பே, தமிழகத்தின் தலைமை நகரங்களில் ஒன்றாயிருந்தது என்பது. அந்நகர்க்கு 10-மைலில், புகழர்க் குன்றில் உள்ள பிராம்மி சாஸனத்தில் - கருவூர்ப் பொன் வாணிகன் என்று குறிக்கப் பட்ட தொடரால் தெளிவாம். கருவூரையடுத்த நெரூர்க்