பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 257 அக்கொங்கு நாட்டுக் கொல்லிமலைப்பக்கத்தே தம் தலைநகரை உடையராயிருந்தவர் என்பதும் நன்கு பெறப்படக் கூடியன. ஆழ்வார் கூறும் கொல்லிநகர் என்பது பழைய தலைநகரான கருவூராகக் கருத இடமுண்டு. கொல்லி மலையைத் தன் பக்கத்துக்கொண்ட நகரைக் கொல்லி நகர் எனல் ஏற்புடைத்தாதல் காண்க. கொல்லிமலைக்குங் கருவூர்க்கும் நெருங்கிய தொடர்புண்மையை “குடையவர் 'காந்தட்டன் கொல்லிச் சுளைவாய்த் தொடையவிழ் தண்குவளை சூடான் (புறப். வெண். 10,1) *கொல்லிப், பெருவாய் மலரோடு பசும்பிடி மகிழ்ந்து... ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொள... பூண்க மாளநின் புரவி நெடுந்தேர் (பதிற்றுப். 81) என்ற முன்னோர் கூற்றுக்களால் உய்த்தறியலாகும்.! இஃதன்றேல் கொல்லிமலையைச் சார்ந்து அரண்வலி பெற்றிருந்த ஊரொன்றே குலசேகரரது தலைநகரெனல் வேண்டும். கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாடு கொல்லிக்கூற்றம் என முன்னோரால் வழங்கப் பெற் றுளது. இக்கூற்றத்தில் தம் தாயாதியரான அதிக 1. 'வஞ்சிமாநகர்' என்ற நூலுள், 143-5-பக்கங்களிலே இத் தொடர்களின் உள்ளீடான கருத்துக்களை மகாவித்வான் - ஐயங்காரவர்கள் நன்கு விளக்கியிருத்தல் காண்க. 17