பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 259 முன்னோர் காலத்தோ பாண்டியர் போன்றவரது படை யெடுப்புக்களாற் கருவூர் பலமுறை தாக்கப்பெற்றுக் கைவசப்படுத்தப் பட்டதே காரணமாகவேண்டும். ! - ஒருசிலர் ஆழ்வார் தலைநகரான இக்கொல்லிநகர் மேலைக்கடற்கரையிலுள்ள கொல்லம் என்று கருதுவர். அக்கொல்லம் பழைய சேர ராஜதானியாக இருந்தது என்பதற்கும், அதற்குக் கொல்லி என்ற பெயர் வழக்குண்டு என்பதற்கும் ஓராதாரமும் இன்மையால் அவர் கொள்கை போலியே என்க. “குரக்கேணிக் கொல்லம்” என முன்பு வழங்கப் பெற்ற அந்நகரம், இப்போது ஸிரியன்-கிறிஸ்தவர்' எனப்படுவோரின் ஆதிமுன்னோரான வியாபாரி யொரு வரால் 825-ம் ஆண்டில் உண்டாக்கப்பட்டு அவர்க் குரிமையாகக் கேரளாதிபதியால் நீரோட்டிக் கொடுக் கப்பெற்ற தென்பதும் அந் நகரந்தோன்றிய காலம் தொட்டு வழங்குவதே கொல்லமாண்டு என்பதும்இந்நகரங் கண்டு நீரேற்ற மருவான் சபீர் ஈசோ (T. A. S. ii 80, 82,) கொல்லந் தோன்றி......(இன்ன) யாண்டு" (Ibid, 44, 73) என வரையப்பட்ட சாஸனத்தொடர்களால் தெளிவாக அறியப்பட்டவை, அதனால் பிற்பட்டுத் தோன்றிய 1. சங்கநாளினும் பகையரசராற் சருவூ த கசப்பட, அதனாற் சேரர் தம் தலைநகரைக் கடற்பக்கத்து மாற்றிய துண்டு. ஆய் அண்டிரன் 'கொங்கரைக் குடகடலோட்டி யவன்' என்று புறநானூறு (130) குறிப்பிடுதல் காண்க (கொங்கர்-சேரர்). 2. இந்நகரங் கண்டு என்பதற்கு, இந்நகரத்தை உள் டாக்கி என்பது பொருள்; 'திருநகரங் கண்ட படலம்' என்ப பரஞ், திருவினையாடல்).