பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 263 ஆகவே, தம் பழைய தலைநகரிற் கோயில்கொண்ட திருமாலே, குலசேகரப் பெருமாளால் மிகவுருக்கமும் இனிமையும் பெருகப் பாடப்பெற்ற மூர்த்தி என்பது வெள்ளிடை மலையாகின்றது. கருவூரின் இப்பகுதி வித்துவக்கோடு எனப் பெயர்பெற்றதற்குப் பொருத் தமுமுண்டு . வஞ்சியாகிய இப்பெருநகரின் எயிற்புறவிருக் கையில் தேவாலயங்களும், பௌத்த சைனப் பள்ளி களும், கல்வியறி வொழுக்கங்கள் நிரம்பிய அறிஞர்வா ழிடங்களும் முற்காலத்தே விளங்கியிருந்தன என்பது மணிமேகலை வஞ்சிமாநகர் புக்க காதையால் தெரியலாம், பிக்குணியான மணிமேகலை, சமயக்கணக்கர் பலரை நேரிற்கண்டு அவ்வவர் கொள்கைகளை உசாவியறிந்த கருவூர்ப்பகுதி இதுவேயாம். திருமால்கோயிலையுடைய இவ்வித்துவக்கோடும், தேவாலயங்களுடையதாக மணி மேகலை குறித்த அவ்வெயிற்புற விருக்கையில் ஒன் றென்னத் தடையில்லை, வித்துவக்கோடு என்பதற்கு, “வித்துவான்கள் வாழும் நீர்க்கரை' என்பது பொருள்; (கோடு-நீர்க் கரை). கடற்கரையிலுள்ள முசிரியை (= கொடுங்கோளூரை) 'முயிரிக்கோடு' என்று சாஸனம் வழங்குதலுங் காண்க." 1. (“குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று" என்பது குறள் (553); 'குளப்பரப்புக் கரையின்றி நீர்நிறைந்தாற் போலும்' என்பது இதன் பொருள்.) 2 Inscriptions of the Madras Presidency, p. 1691.