பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

264 ஆழ்வார்கள் கால நிலை 'தேவ குலமுந் தெற்றியும் பள்ளியும். பூமலர்ப் பொழிலும் பொய்கையு மிடைந்து நற்றவ முனிவருங் கற்றடங் கினரும் நன்னெறி காணிய தொன்னூற் புலவரும் எங்கணும் விளங்கிய வெயிற்புற விருக்கை" (72-6) எனச் சாத்தனார் எயிற்புறவிருக்கையைச் சிறப்பித் தலினின்று, வஞ்சியில் தேவகுலங்களுடன் அறிஞர்க் கெல்லாம் வாழ்விடமாக விளங்கியது இப்பகுதியே என்றும், அதுபற்றியே இது வித்துவக்கோடு என்னும் பெயர் பெறலாயிற்று என்றும் கருதற்குரியன. “விண்டோய் மதில்புடைசூழ் வித்துவக்கோடு என்று குலசேகரப்பெருமாள் அருளிய தொடராலும் வஞ்சியின் பயிற்புறவிருக்கையில் உள்ளதே அத்தல மென்பது புலனாம். இங்கே கோயில்கொண்டருளும் திருமாலே ஆடகமாடத் தரவணைத் துயின்றோன்' என இளங்கோவடிகளாற் சிறப்பிக்கப்பெற்ற பழைய மூர்த்தி யாவர். இதனைச் 'சேரன் செங்குட்டுவன்' சரித்திரத்துள் சேரர் தலைநகர்' என்ற பகுதியில் நன்கு விளக்கியுள் ளேன். குலசேகராழ்வார் அருளிய வித்துவக்கோட்டுப் பதிகத்தை ஊன்றி நோக்குமிடத்து, அத்தலத்தெம் பெருமானை ஒருநாளேனும் பிரிந்து தரியாதவர் இப் பெரியார் என்பது விளங்கக்கூடியது. “ தரு துயரந் தடாயேலுன் சரணல்லாற் சரணில்லை விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட் டம்மானே அரிசினத்தா லீன்றதா யகற்றிடினு மற்றவடன் அருணினைந்தே யழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே