பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 265 " வித்துவக்கோட் டம்மானீ வேண்டாயே யாயிடினும் மற்றாரும் பற்றிலேன் என்றும், நீ கொண்டாளா யாசினும்' மீளாத்துயர் தரினும்' ‘வெந்துயர் வீட்டாவிடினும்' என்றும் இவ் வாறே இவ்வாழ்வார் கூறுவனவற்றால், ஏதோ ஓர் இடையீடு தமக்குண்டாக அதனால் தம் நித்திய வழி பாட்டுக்குரிய அவ்வெம்பெருமானைப் பிரியநேரவே, அதனை ஆற்றாது புலம்பியுருகின்றார் இவர் என்றே தோற்றுகின்றது. அவ்விடையூறு தம் பழம்பகைவரான பாண்டியரது படையெடுப்புக்களால் ஒருகால் கருவூர்க்கு 'நேர்ந்திருத்தல் கூடும். கொங்குநாடு பாண்டியர் கைவசப்பட்டிருந்த செய்தி பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஆழ்வாரது துயர நிலைக்குக் காரணம் எதுவாயினும், வித்துவக்கோட்டுப் பாசுரங்களினின்றும் இவர் நாளுந்தவறாது வழிபட்டு வந்த மூர்த்தி அத்தலத் தெம்பெருமானே என்னத் தடை 'யில்லையாம். ஆகவே, கொங்குநாட்டில் இவர் தலைநகர்ப் பக்கத்து விளங்கியதே அத்தலம் என்பது ஐயமின்றிப் பெறப்படுதல் காண்க. இதுபற்றிப் போலும் “கொங்குங் குடந்தையும்...எங்குந்திரிந்து விளையாடு மென்மகன் என்று பெரியாழ்வார் - கொங்குநாடும் திருமால் திருப் பதிகளுடையதேயெனக் குறிப்பிட்டருளிய தூஉம் என்க, இவற்றால், கொல்லிகாவலரான இப்பெரியார் பாடிய வித்துவக்கோடு அப்பெயருடன் இப்போதுள்ள மலை யாளத்தூர் அன்றென்பதே முடிவாகின்றது. அதனால் அம்மலையாளத்தூர், சேரவேந்தர் தம் பழைய தலைநகரான கருவூர்வஞ்சியைக் கைவிட்டுக் கொடுங்களூரை அவ் வஞ்சிநிலையிற் கொண்டு ஆட்சிபுரிய நேர்ந்த பிற்