பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

266 ஆழ்வார்கள் காலநிலை காலத்தே, அப் பழைய தலைநகர்த் திருமாலையும் தாம் ஆளும் பிரதேசத்தே புதியதாகப் பிரதிஷ்டித்து, வித்துவக்கோடு என்ற பழம்பெயரை அதற்கு வழங்கி அபிமானித்துவந்த தலமாகவே கருதத்தகும். இவ்வாழ்வார் அவதரித்தருளிய நகரம், மேலைக் கடற்கரையிலுள்ள கோழிக்கூடு' என்று திவ்யசூரி சரிதமும், கொல்லிநகர் என்று பின்பழகிய பெருமாள்சீயர் குருபரம்பரையும், வஞ்சிக்களம் என்று வேறு பெரியார் பாடல்களுங் கூறுகின்றன. * திவ்யசூரிசரிதங் கூறும் கோழிக்கூடு என்பது மட்டும் வேறுபாடுடையதாகத் தோன்றினும், கொல்லி :நகரமும் வஞ்சிக்களமும் ஒன்றாகவே கூறவியலும். கொல்லிமலைப்பக்கத்து நகர் என்பதும், வஞ்சி யாகியதானம் என்பதும் உறுப்புப் பொருள்களாய்க் 'கொல்லிக்கும் கருவூர்க்கும் அவ்விரண்டுபெயர்களும் ஏற்புடையவாதல் காண்க. வஞ்சிக்களம் என்பதை அஞ்சைக்களம் எனத் தேவாரப் பாடல்பெற்ற சிவதலத் துடன் சிலர் இயைபுபடுத்தல் பொருத்தமற்றதென்க. இனி இவ்வாழ்வார் தம்மைகொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன் (3, 10) 1. குக்குட கூடஸம்' என்பது அந்நூல்கூறும் வட மொழிப்பெயர். 2, "பொன்புரையும் வேற்குலசேகரனே மாசிப், புனர் பூசத்தொழில் வஞ்சிக் களத்திற்றோன்றி' என ஸ்ரீமத்வேதாந்ததேசிகனும் (தேசிகப் பிரபந்தம்), "எண்டிசையும், ஏத்துங் குலசேகரனூ ரெனவுரைப்பர், வாய்த்ததிரு வஞ்சிக் களம் என ஸ்ரீவரவரமுனிகளும் (உபதேசரத்தினமாலை) அருளிச்செய்தல் காண்க.