பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 267 “கொல்லி நகர்க்கிறை கூடற்கோன் குலசேகரன் (6, 10) (கோழியர்கோன் கொடைக் குலசேகரன் (9, 11, 10, 11) எனக் கூறிக்கொள்ளுதல் காணலாம். இதனால், கூடல் (மதுரை), கோழி (உறையூர்) வேந்தர்களுடன் தொடர் புடையவர் இச்சேரர் பெருந்தகை என்பது பெறப் படும். சேரமன்னர், சோழபாண்டியரின் நாடுகளையும் தம் முடையனவாகக் கூறிக்கொள்வதுண்டு என்பது சங்க நூல்களால் 1 அறியப்படுதலின், இவ்வாழ்வாரும் அம் முறையில் தம்மைப் புனைந்து கூறிக் கொண்டவர் போலும் - என்று கருதுவாரும் உளர். இவ்வாறு ஆழ்வார் கூற்றுப் புனைந்துரைகளே என்பதற்குத் தக்க காரணம் ஒன்றும் அவர் கூறாமையால் அக் கருத்து ஏற்கத்தக்க தன்றாம். அதனால், ஏதோ சோழபாண்டியர் தொடர்பு தமக்கு உண்மைபற்றியே, ஆழ்வார் கூடல் நாயகன் கோழியர் கோன் என்று தம்மைக் கூறலாயினர் என்றே தோற்றுகின்றது. ஆயின், அத்தொடர்பு யாது? கொங்குநாடாண்ட சேரவரசர் வரலாறுகளில் ஒரு. சில இப்போது நமக்குத் தெரிய வருகின்றன. கோயம் புத்தூர் சேலம் பிரதேசங்களினும் பிறவிடங்களிலும், 10-ம் நூற்றாண்டுமுதற் காணப்படும் இச்சேரர் சாஸனங். களால், - இவருட்சிலர் “சோழன்' என்றும், சிலர் 1. “புகா அர்ச்செல்வ பூழியர் மெய்ம்மறை... கொல்லிப் பொருந” என்பது அவர் காட்டிய மேற்கோள் (பதிற்றுப் 73). 2, சேலம் ஜில்லா வொள்ளாற்றுச் சாஸனம்(Ep. Rep. 657of 1905,)