பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 ஆழ்வார்கள் காலநிலை தாமரைக் கண்ணான் உலகு-பரமபதம்; அப்பரம் பதத்தினும் மேம்பட்ட நிரதிசயவின்பப்பேறு வேறுண்டு என்பது அத்தெய்வப்புலவர் கருத்தாகக் கொள்ளற் குரியதன்று. அது கருத்தாயின், உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை' என்றபடி, அவர் ஒரீஇக் கூறிச் சிறப்பித் தற்கு எடுத்துக்கொண்ட உவமை பெரிதும் இழுக்குறு மென உணர்க, அரசர்கள் இனி, பரமபாகவதரான இப்புலவர்களன்றிப் பண்டைத் தமிழரசர் பலரும் திருமால்பத்தியிற் சிறந் திருந்தனர். செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சேரர் பெருந்தகை மாய வண்ணனை மன்னுறப் பெற்றவன் என்று பதிற்றுப்பத்திற் புகழப்படுகின்றான். கோச் செங்கணான் என்ற சோழவரசன் திருநறையூர்த் திருமா லிடம் பரமபத்தி பூண்டிருந்தவனென்று திருமங்கை மன்னன் கூறுவர். இளம்பெரு வழுதியார் என்ற பாண்டியர்குலத்தோன்றல் திருமாலிருஞ்சோலைப் பெரு மானிடம் பேரன்புபூண்ட பரமபாகவதரென்பது பரி பாடலின் 15-ம் செய்யுளால் நன்குவிளங்கும். அடியார்களின் அவதார காரணம் சங்கநாளில் வைணவம் சைவம் போன்ற வைதிக மதங்களை அரசர்களும் அடியார்களும் பெரிதும் ஆதரித் 1. சுகவெள்ளம் விசுமபிறந்து' என்ற திருவாய்மொழித் தொடர்க்கு எழுதப்பட்ட உரைப்பகுதியுள் 'விசும்பு என்றது பரமபதமாய், தாமரைக்கண்ணானுலகு என்னக்கட வதிறே, சுகாதிசயத்துக்கு" எனவரும் ஈட்டின் பங்தி இங்கு அறியத்தக்கது. இதனால், பரிமேலழகர் கொண்ட கருத்தே முன்ஞேருங் கொண்டதென்பது விளங்கும். 2. 7-ஆம் பத்துப் பதிகம்.