பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

273 குலசேகரப்பெருமாள் ஆகவே, பண்டிதரும், திருமாலடியாரும் குலசேகரர் எனற பேருடையாருமாய்ப் பிற்காலத்து விளங்கிய கேரளவேந்தரொருவரால் அருளிச் செய்யப்பட்டதே அம் முகுந்தமாலை என்பது பொருத்தமென்க. அவ்வேந்தர்க்கு ஐயரவர்கள் குறித்த 9ஆம் நூற்றாண்டு ஸ்ரீமந் நாதமுனிகள் காலத்தோடு நெருங் கியதாதலால், குலசேகராழ்வார்க்கும் அதனையே கொள் ளுதல், ஆழ்வார் ஆசாரியர் என்று வேறுபடுத்தப் பட்டு வழங்கும் பிரபல வரலாறுகளோடு பெரிதும் மாறு:படுதலும் அறியத்தக்கது. இவற்றால் முகுந்தமாலை பாடிய குலசேகரர், குலசேகராழ்வார்க்குப்பின் அவர் வழித்தோன்றலான திருமாலடியார் எனக்கொள்வதே மேலே கூறிப்போந்த ஆழ்வார் செய்திகளோடு பெரிதும் ஏற்புடையது என உணர்ந்து கொள்க. குலசேகரப்பெருமாள் தம் திருமொழி 7ஆம் பதிகத் தின் இறுதிப் பாசுரத்தே" மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை வான் செலுத்திவந் தீங்கணை மாயத் தெல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் என்று அருளிச்செய்தனர். இவ்வடிகட்குக் காலஞ் சென்ற ஸ்ரீ கோபி நாதராயர் அவர்கள்- குலசேகர பூபதி யானவர் மல்லைமாநகர் (கடன் மல்லை)க்கு ராஜாவாகிற பல்லவனைப் போரிற் கொன்று விண்ணாடு புகவிட்டுப் போர்க்களத்தினின்றும் போந்து இங்குள்ள மாயத் தோடு விளையாடிய பிள்ளையாகிய கண்ணனைக் கண்டு' என்று பொருளும், இதனால் பல்லவமல்லன் மகனான தந்திவர்மனைக் குலசேகரர் போரிற் கொன்றவராதல் வேண்டும் என்ற கருத்துங் கொண்டு, தம் ஸ்ரீவைஷ்ணவ 18