பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 275 என்று திருமங்கை மன்னனும் இவ்வாறே அருளிச் செய்தல் காண்க. பல்லவனைப் போரிற் கொன்று திரும்பிவந்து கண்ணனைக் கண்டு குலசேகரர் தேவகி புலம்பலைக் கூறினர்' என்பது இவ்வடிகளின் கருத் தாயின், அப் போர்ச்செயற்குப் பின் தேவகிபுலம்பலை ஆழ்வார் பாடுதற்குப் பொருத்தமேனும், அத்தேவகி புலம்பல் இன்னது பற்றியது என்பதேனும் பெறப் படாமையால், அவ்வுரை போலியே என்பது தெளிவு. மேற்பாசுரங்களிற் கூறப்பட்ட கண்ணபிரான் செய்திகளின் தொடர்பாலும், இப்பாசுரத்தின் முதலில் 'மல்லை' எனவருவதனாலும் மாநர்க்கிறையவன்' என் பான் கஞ்சனே என்பது பெறப்படத் தடையில்லையாம். இனி, வளம் பொருந்திய மாநகர்' என்ற ஸ்ரீ பெரியவாச் சான்பிள்ளை வியாக்கியானப்படியும் பொருள் கொள் ளுதல் பொருந்தும். மல்லை-வளம்; 'மல்லைமா முந்நீர்' என்றார் திருமங்கைமன்னனும்." ஸ்ரீரங்கவரலாறு கூறும் “கோயிலொழுகு" என்ற சரித்திர நூலிலே, இவ்வாழ்வார் வரலாறாகக் காணப் படுஞ் செய்தி அடியில் வருமாறு: "கல்யப்தம் 50-வருஷத்துக்கு மேல், குல சேகரப் பெருமாள் சேர, சோழ பாண்டிய மண்டலங் களுக்குப் பிரபுவாய், உறையூர் மதுரை கொல்லி நகர்களிலே திருமாளிகைகட்டி ராஜ்யபாரம் பண்ணுகிற நாளையிலே, நீளாம்சையான தம் முடைய புத்திரி சோழவல்லியை அழகியமண வாளப் பெருமாளுக்குத் திருமணம் புணர்ப்பித்துத் தம்முடைய ஸ்வத்தையும் ஸ்திரீதனமாகப் பெரு 1 பெரிய திருமொழி 4. 3, 6; 8, 6, 4.