பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

276) ஆழ்வார்கள் காலநிலை மாளுக்கு ஸமர்ப்பித்து, மூன்றாம் ஆவரணத்தின் தென்மேற்கிலே சேனைவென்றான் திருமண்டபமுங் கட்டி அந்தத் திருச்சுற்று ஜீர்ணோத்தாரணம் பண்ணுகையில், அந்தத் திருவீதிக்குக் குலசேகரன் திருவீதி' என்று பெயராயிற்று”--என்பதே. இதனுள், தம் கன்னியை அரங்கமுடையானுக்கு, அளித்த வரலாறு, திவ்யசூரிசரிதத்தும் கூறப் பட்டுள்ளமை அறியத்தக்கது. இங்ஙனம், திருமால் பத்தியின் மேலீட்டால் தம் அரசு துறந்து, எம்பெரு மானிடம் உள்ளுருகி நூறு இன்றமிழ்ப் பாசுரங்களை உலகுய்யவருளிய இவ்வாழ்வார் தென்பாண்டிநாட்டிலே பிரமதேசம் - மன்னார் கோயிலிலே! தன்னடிச் சோதிக் கெழுந்தருளினர் என்று கூறுவர். பத்தாம் அத்தியாயம் சடகோபரும் அவர் அருளிச்செயல்களும்* இப்பரத கண்டத்தின் வடகோடியில் அவதரித்துத் தம் ஞான ஒளியால் உலகிருளை நீக்கிய உத்தமபுருடர் புக்தபகவான் என்று கூறுவர். அவ்வாறே இக்கண்டத் தின் தென் கோடியில் அவதரித்துப் பரஞானச் சுடரை வீசிய பெரியார் ஒருவர் உண்டு. அவரே ஸ்ரீ சடகோபர் என்ற நம்மாழ்வார். வைகாசி மாதமும் விசாகத் திரு 1. இவ்வூர் திருநெல்வேலிஜில்லா அம்பாசமுத்திரந் தாலுகாவில் உள்ளது. குலசேகரப் பெருமாள் கோயில் ஒன்று இங்குண்டு. ஆசிரியரின் கட்டுரை மணிகள். பக். 92.