பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

278 ஆழ்வார்கள் காலநிலை பதிகளான மகந்துக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவ்வாறே வைஷ்ணவ ஆசாரியத் தொடர்புடையவரா யிருத்தலை நாம் கேட்டறியலாம். ஆழ்வார் வரலாறு ஸ்ரீ சடகோபர் லைபவங்களாக வழங்குவன யாவ ரும் நன்கறிந்தவை, கற்பனைக்' கதைகளாக இவர் வரலாற்றில் அமைந்தவை கிடையா, ஆழ்வார் திருநகரி' என வழங்குந் திருக்குருகூரிலிருந்து ஆண்டு வந்த சிற்றரசர் குலத்து உதித்தவர் இப்பெரியார், அவ்வர சருள் ஒருவரான காரியார் என்பவருக்கு மலைநாட்டுத் திருவண்பரிசாரம் என்ற தலத்தினரான உடைய நங்கையார் என்ற தேவியிடம் புத்திரராய் அவதரித்த வர். மிக்க இளம் பருவத்தே இறைவன் அருள் கைகூடி, அவனை நேரே தரிசிக்கப் பெற்றுப் பரம ஞானியாய் உலகப் பற்றற்று யோகத்தில் இருந்தவர். இதனை, "சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாமை தேவர் பிரானறியும் (திருவாய். 7-10-10) என்னை நெகிழ்க் கினும் என்னுடை நன்னெஞ்சந் தன்னை நெகிழ்க்கத் தானுங் கில்லான்' (க்ஷ 1-7-8) குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே, எழுவதோ குரு என் னெஞ்சுள் எழுமஃதி யார்க்கும் அறிவரிதே' (க்ஷ-5-5-10) என்பவற்றா லறியலாம். அக்காலத்தில் திருக்கோளூர் அந்தண முனிவரான மதுரகவிகள் என்பார் இவர் மகிமைகளை உணர்ந்து, இவரை வழிபட்டுப் பேரருள் பெற்றனர். பரஞான பரம் பக்திகளாலும் ஈசனருளாலும் தாம் கண்ட உத்தம தத்துவங்களைத் திருவாய்மொழி, திருவிருத்தம், திரு வாசிரியம், பெரிய திருவந்தாதி என்ற நான்கு திவ்யப் பிரபந்தங்களால் உலகோருய்ய அருளிச் செய்து, இளம்