பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 19 தும் போற்றியும் வந்தமையால், நாடுமுழுதும் அன்னோர் நல்வழியையே பின்பற்றியொழுகிய தென்பது நன்கறி யப்படுகின்றது. சைன பௌத்தம் அக்காலத்தே சைனபௌத்த மதங்களும் அச்சமயத் தவர் முயற்சியால் தென்னாட்டிற் சிறுகப்பரவியிருந்த தேனும், வைதிகமதங்களின் செல்வாக்கை அவை அடைந்தனவல்ல, ஆனால் சங்ககாலத்துக்குப் பின்னர்அஃதாவது உத்தேசம் கி. பி. 5, 6-ம் நூற்றாண்டு முதலாக-வடநாடெல்லாம் உரக்க வீசிப் போந்த சைன பௌத்தங்களாகிய சண்டமாருதம் தென்னாட்டிலும் சுழன்றடிக்கத் தொடங்கியது. தமிழரசரின். தலைமைநகர்ப் புறஞ்சேரிகளினும்' வைதிகர் வாழிடங்களினும் இச்சமயத்தவர் தங்கித் தங் கொள்கைகளைப் பரப்பியும் சைனபெளத்தப் பள்ளி களையும் உபதேச கூடங்களையும் தாபித்தும் வந்தனர். தங்கள் சமயங்களைப் பிரபலப்படுத்துவதில் இன்னோர் கொண்டிருந்த ஆற்றலும் ஊக்கமும் அதிசயமானவை. வடகலைகளிற் பெரும் பயிற்சியும் வாக்குவன்மையும் பெற்று நின்ற இவர்கள், தாம் சென்ற நாடுகளிலெல்லாம் தத்தம் சங்கங்களைத் தாபித்தும் தேசபாஷைகளை நன்கு கற்று அவற்றின் மூலம் தஞ்சமயக் கொள்கைளைத் தக்கவாறு பெருக்கியும் வந்தனர். 1. மதுரை வஞ்சி முதலிய தலைநகரங்களில் சைன பௌத்தப் பள்ளிகளும் உறைவிடங்களும் நகரின் எயிற்புற விருக்கையில் அமைந்திருந்த செய்தி, சிலப்பதிகாரம்--புறஞ் சேரியிறுத்த காதையாலும், மணிமேகலை வஞ்சிமாநகர் புக்க காதையாலும் அறியலாம்.