பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

280 ஆழ்வார்கள் காலநிலை கொள்கைகள் இவ்வாழ்வாரது அருளிச் செயல்களில் திருவாய் மொழி சிறப்பாகப் போற்றப்படுவதாகும். இத் திவ்யப் பிரபந்தத் துள், இறை நிலை, உயிர் நிலை, உபாய நிலை, விரோதி நிலை, புருடார்த்த நிலை என்ற ஐந்தன் உண்மை களும் கூறப்பட்டுள்ளன. இந்த அர்த்த பஞ்சக ஞானமே முக்தி யடைவிக்க வல்லதென்பர் சமய நூலோர். இவற்றுள், இறை நிலையில் வேதவேதாங்கங்களால் முடி வாக எடுத்துரைக்கப்பட்ட பரம்பொருள், திருமாலே என்பது இவர்தம் துணிபு. அப் பரமான்மா தன்போல நித்தியமாய் உள்ள சித்து (அறிவுடைப் பொருள்) அசித்து (அறிவில் பொருள்) என்ற இரண்டினையும் தன் அவயவங்களாகக் கொண்டிணைந்து, எல்லாக் காரணங்களும் தானேயாய் சிருட்டி, திதி, லயங்களை நிகழ்த்திய வண்ணம் உள்ளது, அப் பரம்பொருள் தூலமாய் விரியும் நிலையே சிருட்டி யென்றும், சூக்கும் மாய்ச் சுருங்கிய நிலையே லயம் என்றும் இவற்றின் இடைப்பட்ட காப்புநிலையே திதி என்றும் கூறப்படும் இம் முத்தொழில்களையும் அப்பரமான்மாவே மூவுருவ மாக நின்று இயற்றுவதென்பதும், இச்செயல்கள் அவனது நித்தியமாய விளையாட்டுக்களே என்பதும் ஆழ்வார் கொள்கைகள். 'தானே யுலகெல்லாந் தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே' (திருவாய், 10-5-3.) தானோ ருருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய்... வானோர் பெருமான்' (திருவாய்-1-5-4) பரம்பொருளான மூலத் தனிவித்து ஒரு பெரு மரமாகி வளர்ந்து ஓங்குங்கால், அதன் அடிப்பகுதி பின்